கட்டில்

மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கட்டில்'. இ.வி.கணேஷ்பாபு இயக்கி, தயாரித்து, நடிக்கிறார். சிருஷ்டி டாங்கே, கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கட்டில்

மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கட்டில்'. இ.வி.கணேஷ்பாபு இயக்கி, தயாரித்து, நடிக்கிறார். சிருஷ்டி டாங்கே, கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
 காலம் முழுக்க ஜல்லிக்கட்டு காளைகளைத் தயார் செய்வதிலேயே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பறவைகளுக்கான ஆராய்ச்சிக்காகவே தன்னை அர்பணித்தவர்கள், பாம்புகளின் புதிர்களைத் தெரிந்துக் கொள்வதையே பயணமாக்கி கொண்டவர்கள்... இப்படி ஏக மனிதர்கள் ஒரு அதிசயம் போல் நம்மைக் கடந்து கொண்டே இருக்கிறார்கள்.
 இதிலும் அப்படித்தான் ஒரு குடும்பத்தோடு தலைமுறைகள் கடந்து பயணிக்கும் கட்டில். அது சார்ந்த சம்பவங்களே கதை. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மனிதர்களின் பெரும் பிரச்னை. நம்பிக்கை, அன்பு எல்லாம் பொய்யாகும் போதுதான், எல்லாம் கசந்து போகிறது. இந்த பூமியோடும், மனித வாழ்க்கையோடும் பிற பொருகள்களுக்கு இருக்கும் தொடர்பு என்பது மிக முக்கியமானது. தனது பாடல் பயணத்தில் 40-ஆம் ஆண்டை நிறைவு செய்யும் கவிஞர் வைரமுத்து, இதில் பாடல்களை எழுதுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com