வாரிசுகளின் முயற்சி!

தமிழில் "காதல் எங்கே' என்ற பெயரிலும், தெலுங்கில் "யாதலோ மவுனம்' என்ற பெயரிலும் வெளியான இசை ஆல்பத்தை லட்சுமிதேவி இயக்கியுள்ளார்.
வாரிசுகளின் முயற்சி!


தமிழில் "காதல் எங்கே' என்ற பெயரிலும், தெலுங்கில் "யாதலோ மவுனம்' என்ற பெயரிலும் வெளியான இசை ஆல்பத்தை லட்சுமிதேவி இயக்கியுள்ளார். இந்த ஆல்பத்தில் சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன் கணேசன், நடிகை ஸ்ரீதேவிக்கு மருமகள் முறையான ஸ்ரீஷா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் விக்னேஷ் சிவசுப்ரமணியம், வெஸ்டா சென் ஆகியோரும் வருகிறார்கள்.

ஆல்பத்தை இயக்கிய இயக்குநர் லட்சுமிதேவி,  நடிகை பத்மினியின் கொள்ளு பேத்தி. ஒரே ஆல்பத்தில் சிவாஜி, பத்மினி, ஸ்ரீதேவி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து பணியாற்றியது இதுவே முதல்முறை. 

வருண்மேனனும், அச்சு ராஜாமணியும் இசையமைத்துள்ளனர். வாழ்வை ஒவ்வொரு கணமும் அனுபவித்து வாழ வேண்டும் என்ற கருவில் உருவான இந்த பாடலை அபிநந்தன் ராமானுஜம் படமாக்கியுள்ளார். "வென் தி மியூசிக் சேஞ்சஸ்' என்ற படத்துக்குப் பின் இந்த இசை ஆல்பத்தை லட்சுமிதேவி இயக்கியுள்ளார். ஹாலிவுட்டில் நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்த ஆல்பம், "லைவ் ஆக்ஷன் ஷார்ட்' பிரிவில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கார் விருதுக்கும் போட்டியிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com