படத்துக்காக மென் பொருள்

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "விஷமக்காரன்.' அறிமுக இயக்குநராக களம் காணும் வி இப்படத்தின் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
படத்துக்காக மென் பொருள்

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "விஷமக்காரன்.' அறிமுக இயக்குநராக களம் காணும் வி இப்படத்தின் கதாநாயகனாகவும் நடிக்கிறார். அனிகா விக்ரமன், சைத்ரா ரெட்டி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மனிதர்களைத் தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல் எவ்வளவு முக்கியமானது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைக் கருவாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஐ.டி துறையில் மனித நிர்வாகத்தைப் பல வருடங்களாகக் கவனித்து வந்த இயக்குநர் வி, மனிதர்களைக் கையாளுவதையே கருவாக கொண்டு கதைக்களம் அமைத்துள்ளதாகத் தெரிவிக்கிறார்.

கதாநாயகனின் மனைவியாக நடித்துள்ள அனிகா விக்ரமன் "ஜாஸ்மின்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்னொரு நாயகியான சைத்ரா ரெட்டி ஜீ டிவி தொடர்களில் பிரபலமானவர். இந்த மூவரை சுற்றி நகரும் விதமாகத்தான் இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் இயக்குநர் வி, சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர் என்பதால், இந்தப்படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக, திரைப்பட நிர்வாகம் மற்றும் உருவாக்கம் தொடர்பான "ஹனி பிலிக்ஸ்' என்கிற ஒரு சாப்ட்வேரை உருவாக்கியுள்ளார்கள். ""ஒரு படம் துவங்குவதற்குத் தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்து விடுமாம். சொல்லப்போனால் இந்த சாப்ட்வேரை சோதனை செய்வதற்காக இந்தப்படத்தை உருவாக்கினோம் என்று கூடச் சொல்லலாம்'' என்கிறார் இயக்குநர் வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com