விமானத் தயாரிப்பின் அடித்தளம்

இன்று உலகளவில் பல ரகப்பட்ட விமானங்கள் வந்துவிட்டன. ஆனால் பறக்கும் எண்ணம் 1400-ஆம் ஆண்டு காலத்திலே உருவாக்கம் பெற்றுவிட்டது என்பது தான் உண்மையாகும்.
விமானத் தயாரிப்பின் அடித்தளம்

இன்று உலகளவில் பல ரகப்பட்ட விமானங்கள் வந்துவிட்டன. ஆனால் பறக்கும் எண்ணம் 1400-ஆம் ஆண்டு காலத்திலே உருவாக்கம் பெற்றுவிட்டது என்பது தான் உண்மையாகும்.

இக்காலகட்டத்தில் வாழ்ந்தவர்தான் புகழ்பெற்ற ஓவியரான லியனார்டோ டாவின்சி. இவர் தமது ஓவியம் மூலம் விண்ணில் பறக்கும் விமானத்தைக் கற்பனையில் வரைந்து காட்டினார். அத்துடன் ஒரு இறக்கை போன்று அமைத்து விண்ணில் மனிதன் பறந்து செல்ல முடியும் என்று கூறினார். அதோடு  பறக்கும் வகையில் ஒரு கருவியையும் உருவாக்கிவிட்டார் டாவின்சி. ஆனால் பறப்பதற்கு வழி தெரியவில்லை.

ஆனால் இவரது முயற்சிக்கு பலர் ஆதரவாக இருந்ததோடு அல்லாமல் அவர்களும் ஆராய்ச்சியில் இறங்க ஆரம்பித்து விட்டார்கள். ஊர் முழுவதும் விண்ணில் பறப்பது பற்றிய செய்திதான். 

பிரான்சு நாட்டைச் சேர்ந்த கோல்டியர் சகோதரர்கள் புகை நிரப்பப்பட்ட பலூனை தயாரித்து விண்ணில் பறக்கவிட்டார்கள். விண்ணில் பறப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. பெரிய அளவில் பலூன் வந்து சேர்ந்தது.அதில் உட்கார்ந்து பயணம் செய்வதற்கு எஃப்.பீடி ரோசியர்ஸ் என்ற விஞ்ஞானம் ஆர்வம் மிக்க இளைஞன் தயாராக இருந்தான். 

பலூன் அந்தரத்தில் ஆயிரம் அடிக்கு மேல் பறந்து சென்று கொண்டிருந்தது. அதன் அடிப்படையாக கூடையில் ரோசியர்ஸ் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தான். மக்கள் அனைவரும் வியப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பலூன் தீப்பற்றிக் கொண்டது. பத்து நிமிடங்களில் பலூன் எரிந்து சாம்பலானது. அந்த சாம்பலோடு ரோசியர்ஸ் எனும் அந்த வீர இளைஞனின் உடலும் சாம்பலாகியது.

இன்று வளர்ந்து நிற்கும் விஞ்ஞானத்தில் பலரது உயிரும் தியாகமாகி இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாகும்.

(உலக மேதைகளின் வரலாற்றுச் சம்பவங்கள் நூலிலிருந்து) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com