மெல்லோட்டத்தின் பயன்கள்

மெல்லோட்டத்தின் செய்முறையை அறிவதற்கு முன்பு அவற்றின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.
மெல்லோட்டத்தின் பயன்கள்

மெல்லோட்டத்தின் செய்முறையை அறிவதற்கு முன்பு அவற்றின் பலன்களைத் தெரிந்து கொள்வது அவசியம்.

1) நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகிறது.
2) கிருமிகளை எதிர்த்துப் போராடும் ரத்த வெள்ளையணுக்களை வீரியத்துடன் செயல்படச் செய்கிறது.
3) நம் உணவின் மூலம் நம் உடலில் தோன்றும் கிடோன், யூரியா, லாக்டிக் அமிலம், ஹிஸ்டோமைன், பிராடி ஹிஸ்டோமைன் போன்ற கழிவுப் பொருள்கள் வெளியேற வழி செய்கிறது.
4) ரத்த ஓட்டம் சீரடைவதுடன் இறந்த செல்களை உயிர்பிக்கின்றது.
5) மெல்லோட்டத்தின் போது உடலின் அதிக அளவு கொழுப்பு கரைகிறது.
6) நுரையீரல், சிறுநீரகம், ஜீரண மண்டல உறுப்புகள், பித்தப்பை, கணையம், கல்லீரல் போன்ற உறுப்புகள் சீராக இயங்கத் தொடங்குகின்றன.
7) மெல்லோட்டத்தின் போது நம் உடலில் சுரக்கும் உய்க்ர்ழ்ல்ட்ண்ய்ள் என்னும் திரவம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
கடைபிடிக்க வேண்டியவை:
1) மெல்லோட்டம் என்பது ஓட்டத்திற்கும், நடைக்கும் இடைப்பட்டதாகும்.
2) ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மெல்லோட்டம் செல்வது சிறந்து
3) ஓடும் போது நிதானமாக ஒரே சீரான வேகத்தில் ஓட வேண்டும்.
4) வேகம் வயது மற்றும் உடல் அமைப்பிற்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும்.
5) மூச்சிரைக்க ஓடக் கூடாது.
6) குறைந்த வேகத்தில் ஆரம்பித்து படிப்படியாக நேரத்தைக் கூட்ட வேண்டும்.
7) கை, கால்களை விரைப்பாக வைக்காமல் தளர விட வேண்டும்.
8) மெல்லோட்டத்தின் போது நம் உடலில் ஏற்படும் உஷ்ணம் வெளிக் காற்று பட்டு குளிர்ந்து விடாதவாறு கனமான ஆடைகளை அணிவது நல்லது.
9) இடைவிடாமல் தொடர்ச்சியாக ஓடினால்தான் உடலில் உஷ்ணம் ஏற்படும். இடையில் நிற்கக் கூடாது.
10) நாள்தோறும்  மெல்லோட்டம் செல்லவேண்டும்.
11) மெல்லோட்டம் செல்ல காலை வேளையே சிறந்தது. 
நாம் தினமும் விரும்பிச் செய்யும் உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பும், செய்த பின்னும் ஸ்டிரெச்சிங் பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது. இதை தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடல் ரப்பர் போல வளைந்து கொடுத்து புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறதாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com