நாசா வீரர்கள் சாதனை

நாசா விண்வெளி வீரர்கள் எடுத்த அரிய புகைப்படங்கள் வியக்க வைத்துள்ளன. அமெரிக்க நாட்டின் விண்வெளி  ஆய்வு மையமான நாசா, பூமியில் இருக்கும் நிலம், நீர் என பலவற்றின்  அற்புதமான படங்களை அவ்வப்போது வெளியிடும்.
நாசா வீரர்கள் சாதனை


நாசா விண்வெளி வீரர்கள் எடுத்த அரிய புகைப்படங்கள் வியக்க வைத்துள்ளன. அமெரிக்க நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, பூமியில் இருக்கும் நிலம், நீர் என பலவற்றின் அற்புதமான படங்களை அவ்வப்போது வெளியிடும். இதேபோல் நாசா விண்வெளி வீரர்கள் செயற்கைக்கோள் மூலமாக எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து கொள்வதும் வழக்கமாகும்.

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து நாசா விண்வெளி வீரர்கள் எடுத்துள்ள இத்தாலியின் டுரின், பனி படர்ந்த இமயமலையின் வியக்கவைக்கும் புகைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நாசா விண்வெளி வீரரும், பொறியாளருமான மார்க் டி வந்தே ஹய், மற்றொரு வீரரான ஷேன் கிம்பரோ இருவரும் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்கள்.

மார்க் டி வந்தே ஹய், பூமிக்கு மேல் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி ஆய்வுகள் செய்து வருபவர், இமயமலையில் பனிபடர்ந்திருக்கும் துல்லியமான அழகிய புகைப்படத்தை அங்கிருந்து எடுத்து, தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். "இமயமலையின் இந்த புகைப்படம் தெளிவான, பிரகாசமான நாளில் எடுக்கப்பட்டது. இது போன்ற காட்சியை என்னால் மீண்டும் பெற முடியாது' என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், மற்றொரு நாசா விண்வெளி வீரரான ஷேன் கிம்பரோ, இத்தாலியில் உள்ள டுரின் நகரத்தை இரவு நேரத்தில் வசீகரிக்கும் அழகுடன் மிளிரும் புகைப்படத்தை எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். "இத்தாலியின் மிகப்பெரிய வரலாறு மற்றும் கலாசார சிறப்பு கொண்டது டுரின் நகரம். இந்த வடக்கு இத்தாலி நகரை, விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கண்டுபிடிப்பதற்கு எளிமையானது,' என கூறியுள்ளார்.

விண்வெளி வீரர்களின் இந்த அரிய புகைப்பட பகிர்வை ஏராளமானோர் கண்டு களித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com