மாயமுகி

டி .பி .கே இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மாயமுகி'.  
மாயமுகி

டி .பி .கே இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மாயமுகி'.  தெலுங்கு சினிமாவில் பிரபலமான ரவிதேஜா கதாநாயகனாக நடிக்கிறார். "இன்னொருவன்', "அவள் பெயர் தமிழரசி', "நீர்ப்பறவை', "வீரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்த மனோ சித்ரா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யதேவ், "தூத்துக்குடி' கார்த்திகா, ஆம்னி, சுவாதி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை  பி.எம்.ரவி நாயக் இயக்குகிறார். இயக்குநர் பேசும் போது... "" பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

ஹாலிவுட்டில் பிரபலமான பாணியாக உள்ள பேண்டஸி சினிமாக்கள் இங்கே இந்தியாவில் குறைவாகவே உள்ளது. அதைக் கொண்டு வரும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன்.  ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெறும் வகையில் இதன் கரு உருவாக்கப்பட்டுள்ளது.  பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் வகையில் இந்தப் படத்தின் உருவாக்கம் இருக்கும். திரைக்கதையின் பின்னணியில் ஆன்மிக கருவும் உள்ளது இதன் சிறப்புகளில் ஒன்று.  இதுவரை பேசப்படாத சமூகப் பிரச்னைகளையும் திரைக்கதையின்அங்கமாக வைத்திருக்கிறேன்'' என்றார் இயக்குநர். பிரகாஷ் என்.பத்மா ஒளிப்பதிவு.  ஜெயன் பாலா இசையமைக்கிறார். "காதல்' மதி பாடல்களை எழுதுகிறார்.  டேனியல் - சந்தோஷ் படத்தொகுப்பு செய்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com