படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த நாள்

"வெளுத்து கட்டு', "தோனி', "தடையற தாக்க' எனப் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த விஸ்வாந்த், "அட்ட கத்தி' படம் மூலம் கவனிக்க வைத்ததோடு, "கபாலி' படத்தில் தனது இயல்பான நடிப்பு
படப்பிடிப்புத் தளத்தில் பிறந்த நாள்


"வெளுத்து கட்டு', "தோனி', "தடையற தாக்க' எனப் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த விஸ்வாந்த், "அட்ட கத்தி' படம் மூலம் கவனிக்க வைத்ததோடு, "கபாலி' படத்தில் தனது இயல்பான நடிப்பு மூலம் பாராட்டப்பட்டவர்.  தற்போது பல படங்களில் கதையின் நாயகனாகவும், வில்லன் உள்ளிட்ட பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். "கபாலி' படத்தைத் தொடர்ந்து "அண்ணாத்த' படம் மூலம் மீண்டும் ரஜினி படத்தில் நடித்து வரும் விஸ்வாந்த், தனது பிறந்தநாளை "அண்ணாத்த' படக்குழு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை  விஸ்வாந்த், தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்தப் புகைப்படம் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், நடிகர்களை வைத்து வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி வரும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் என்.ஜே.சத்யா, நடிகர் விஸ்வாந்தை வைத்தும் வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்களை சத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்தப் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.அடுத்து  சசிகுமார் நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பவர். "8 தோட்டாக்கள்' வெற்றி நடிக்கும்  படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், "அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் படத்திலும் முக்கிய கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com