தமிழ் படங்களில் ஆர்வம்

தென்னிந்திய முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகளும், நடிகையுமான  லஷ்மி மஞ்சு, "மறந்தேன் மன்னித்தேன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் படங்களில் ஆர்வம்

தென்னிந்திய முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகளும், நடிகையுமான  லஷ்மி மஞ்சு, "மறந்தேன் மன்னித்தேன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் "கடல்', ராதாமோகன் இயக்கிய "காற்றின் மொழி' ஆகிய படங்களில்  நடித்தார்.

ற்போது, மோகன்லாலுடன் "மான்ஸ்டர்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வரும் லஷ்மி மஞ்சு, தமிழ்ப் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். பிக் பாஸ் தர்ஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். இதுவரை வந்த எந்த ஒரு தமிழ்ப் பட வாய்ப்பையும் நிராகரித்ததில்லை. அதேபோல், இப்படி தான் நடிப்பேன், இப்படிப்பட்ட வேடத்தில் தான் நடிப்பேன், என்று சொன்னதும் இல்லை. நல்ல வேடமாக இருந்தால், எந்த வேடமாக இருந்தாலும் நான் நடிப்பேன். 

தமிழ் சினிமாவை பொருத்தவரை, என்னை பலர் அணுகாததற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. அதாவது, நான் பெரிய நடிகரின் மகளாக இருப்பதால் தான் என்னை அணுகுவதற்கு யோசிக்கிறார்கள். நான் எப்படி நடந்துக்கொள்வேனோ, என்னை வைத்து எப்படி படமாக்குவது, என்றெல்லாம் யோசிக்கிறார்கள் போலிருக்கிறது.

தமிழ் படங்கள் மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. அதனால், தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சவாலான வேடங்களில் நடிக்க  ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com