கிராமபோன் மியூசியம்

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பாளா என்ற நகரத்தில் வசிக்கும் சன்னி மேத்யூ, கடந்த 32 ஆண்டுகளாக தான் சேகரித்து வந்த கிராமபோன், ரிகார்டு பிளேயர்ஸ், இசைத்தட்டுகளை "டிஸ்க்ஸ் அண்ட் மெஷின்ஸ் சன்னிஸ்
கிராமபோன் மியூசியம்

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பாளா என்ற நகரத்தில் வசிக்கும் சன்னி மேத்யூ, கடந்த 32 ஆண்டுகளாக தான் சேகரித்து வந்த கிராமபோன், ரிகார்டு பிளேயர்ஸ், இசைத்தட்டுகளை "டிஸ்க்ஸ் அண்ட் மெஷின்ஸ் சன்னிஸ் கிராமபோன் மியூசியம் ரிகார்ட்ஸ் ஆர்கிவ்' என்ற பெயரில் மியூசியம் ஒன்றை அமைத்துள்ளார். "இந்தியாவில் உள்ள ஒரே கிராமபோன் மியூசியம் இது தான்' என்கிறார் சன்னி மேத்யூ.

கேரள வனத்துறை அபிவிருத்தி வாரியத்தில் பணியாற்றிய பின் 2012-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற சன்னி மேத்யூ, ஒரு முறை ஜெர்மனி நிறுவனத்திற்காக இசைத்தட்டுகள் பற்றிய எழுதிய ஆய்வு கட்டுரையில் 1924-ஆம் ஆண்டு பெங்களூரில் துவங்கப்பட்ட சீதா போன் கம்பெனியில் இருப்பு இருந்த இசைத்தட்டுகள் பற்றி தகவலை குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்து மகிழ்ச்சியடைந்த கடை உரிமையாளர் சீனிவாசமூர்த்தி, மேத்யூ உடன் நீண்ட காலம் தொடர்பில் இருந்ததோடு அவ்வப்போது சில இசைத்தட்டுகளை கொல்கத்தா சென்றிருந்த போது பழக்கமான தன்னுடைய நீண்ட கால நண்பரான முகமது சஃபியுடன் சேர்ந்து தன்னுடைய சொந்த செலவில் இரண்டு நாள் கண்காட்சியையும், கலந்துரையாடல் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தாராம்.

இரு நாள்களிலும் ஏராளமான பார்வையாளர்கள் வந்தது மேத்யூவுக்கு ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. இவர்களில் பலர் இதுவரை கிராமபோனையே பார்த்ததில்லை என்று கூறவே தன்னிடமுள்ள சேகரிப்புகளை மியூசியமாக அமைக்கும் எண்ணம் மேத்யூவுக்குத் தோன்றியது.

2015-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி மியூசியம் திறக்கப்பட்டது. 1940 முதல் 1985-ஆம் ஆண்டு வரை தான் சேகரித்த போனோ கிராம், கிராமபோன்கள், எலக்ட்ரிகல் ரிகார்டு பிளேயர்ஸ், மேக்னடிக் ரிகார்ட்ஸ் டேப் ரிகார்டர், ஆப்டிகல் பிலிம் மற்றும் லேசர் (எல்டி.விசிடி) பல்வேறு அளவிலான பிளாப்பி டிஸ்க்ஸ் என உள்நாடு, வெளிநாடு சாதனங்கள் அனைத்தையும் தானே ஷெல்ப்கள் அமைத்து வரிசையாக அடுக்கி வைத்துள்ளார். 

சேகரிப்புகள் அதிகரிக்கத் துவங்கியவுடன் தூசு படியாமல் பாதுகாப்பாக வைக்க வீட்டில் இடம் பற்றாக்குறை ஏற்படவே, தற்போது வசித்து வரும் வீட்டிலேயே மேலும் இரண்டு மாடிகள் எழுப்பி குளிர் சாதன வசதி செய்து 32 ஆண்டுகளாக தான் சேகரித்துள்ள 1 லட்சத்து 10 ஆயிரம் இசைத்தட்டுகளை புதிய உறைகளில்  இட்டும், 250-க்கும் மேற்பட்ட கிராமபோன்களையும் வரிசையாக அடுக்கி வைத்துள்ளார். இந்த இசைத்தட்டுகள் சேகரிப்புக்கு பின்னணியில் சுவாரசியமான தகவல்களும் உள்ளன.

தன்னுடைய நண்பர் முகமது சஃபியுடன் சேர்ந்து பழைய கிராமபோன், இசைத்தட்டுகளை தேடி பிடித்து வாங்குவதற்காக சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள பழைய பொருள்கள் விற்பனை கடைகளுக்கு செல்வதுண்டு. ஒரு முறை கொல்கத்தா சென்றிருந்த போது, 1902-ஆம் ஆண்டு வெளியான வெகு அபூர்வமான இசைத்தட்டு ஒன்று இவருக்குக் கிடைத்தது. இந்தியாவுக்கு ஜெர்மனியர் ஒருவர் 14 வயது சிறுமி ஒருத்தி பாட முன் வராததால் அச்சிறுமியை பாட வைத்து பதிவு செய்த இசைத்தட்டுகளின் 200 பிரதிகள் விற்பனைக்கு விடப்பட்டன. அந்த சிறுமியின் குரல் வளம் நன்றாக இல்லாததால் இசைத்தட்டுகள் விற்பனை ஆகவில்லை. இருந்தாலும் பின்னாளில் அச்சிறுமி சிறந்த நடிகையாக பிரபலமடைந்தார் என்பது வேறு கதை என்றாலும், அந்த ஜெர்மனி என்ஜினியர் இந்தியாவில் பதிவு செய்த முதல் இசைத்தட்டு தனக்குக் கிடைத்ததை பெரும் அதிர்ஷ்டமாக கருதினார் மேத்யூ. 

அதன் பின்னர் கவுஹர் ஜான் என்ற பெண்மணி பாடி பதிவு செய்த இசைத்தட்டு முதல் இசைத்தட்டாக கருதப்படுகிறது. இது போன்ற அபூர்வமான 500 பாடல்களை இசைப்பிரியர்களுக்காக யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார் மேத்யூ என்னுடைய மியூசியத்தை பார்வையிட வருபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் என்றாலும், வருங்காலத்தில் இளைய தலைமுறையினர் இசை சாதனங்கள் வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள இந்த மியூசியம் பயனுள்ளதாக இருக்கும். அதற்காகவே 100 ஆண்டுகள் ஆனாலும் பழுதடையாத வகையில் என்னுடைய சேகரிப்புகளை பாதுகாப்பாக வைத்துள்ளேன்.என்று கூறும் மேத்யூ வாலிப பருவத்தில் 20 முதல் 40 வயது வரை கேட்டு ரசித்த பழைய ஹிந்தி, மலையாளப் பாடல்களையே இப்போதும் கேட்டு மகிழ்கிறார். 

தற்போதைய படங்களில் வலுவான கதையோ, அர்த்தமுள்ள கவிதை நயமான பாடல்களோ இல்லை என்பதால் 80-க்கு பின் வந்த பாடல்களில் விருப்பமில்லையாம். துவக்கத்தில் இந்த அபூர்வமான மியூசியத்தை பார்வையிட எல்லா நாள்களிலும் அனுமதி தந்தவர் இப்போது வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அனுமதிப்பதோடு, மற்ற நாள்களில் முன் கூட்டியே தகவல் தெரிவித்து வருபவர்களை அனுமதிக்கிறாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com