உணவு  சேவையில்  புது உக்தி!

பல இடங்களில் ரூபாய் நோட்டுகளைப் போட்டால் தேவையான பொருள்களை வழங்கும் தானியங்கி ஏ.டி.எம் மெஷின்கள் வந்துவிட்டன.
உணவு  சேவையில்  புது உக்தி!

பல இடங்களில் ரூபாய் நோட்டுகளைப் போட்டால் தேவையான பொருள்களை வழங்கும் தானியங்கி ஏ.டி.எம் மெஷின்கள் வந்துவிட்டன. இந்த வகையில் குளிர்பானங்கள், தேநீர், காப்பிப் போன்றவற்றை பெற உரிய பணத்தை செலுத்தி தேவையானதைப் பெற சாதனங்கள் வந்துவிட்டன. அதே தொழில்நுட்பத்தில் விரும்பும் உணவு வகைகளை வழங்கவும் சாதனங்களை அறிமுகம் செய்திருக்கிறார் பிரேர்னா கல்ரா. தில்லி, மும்பை, சண்டிகார் போன்ற நகரங்களில் சுமார் 170 தானியங்கி மின்பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்தத் தானியங்கி உணவகங்கள் "செயலி' முறையில் இயங்குகின்றன. "தால்சினி' என்ற செயலி மூலம், நமது பகுதிக்கு அருகில் இருக்கும் மின்பெட்டியில் என்னென்ன உணவு வகைகள் உள்ளன என்று தெரிந்து கொண்டு அவற்றில் நமக்குத் பிடித்த உணவு வகையைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த உணவு பண்டத்தின் விலையை மின் பரிமாற்ற முறையில் செலுத்தினால், நமக்கு ஒரு "ஒடிபி' எண் அனுப்பி வைக்கப்படும். மின்பெட்டியில் இருக்கும் "எண் பலகை'யில் அந்த "ஒடிபி' எண்ணை அழுத்த, நாம் தேர்வு செய்த உணவு "வழங்கும் பாதை' வழியாக வெளியே வந்து சேரும் .

சரி.. மின் பெட்டியில் உணவு எப்படித் தயாராகி வெளியே வருகிறது?

“மின்பெட்டி உணவைத் தானாகத் தயாரிக்காது. மின்பெட்டியின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஒருவர் பல்வகை உணவுகளைத் தயாரித்து காலை, மதியம், மாலை வேளைகளில் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போவார். மின்பெட்டியில் உணவுவகைகள் இளம் சூடான வெப்பநிலையில் இருக்கும்.

வீட்டில் இருந்து கொண்டே வருவாய் ஈட்ட விரும்பும் பெண்மணிகள் "தால்சினி' என்ற மின் உணவுப்பெட்டி சங்கிலியில் இணைந்து உணவு வகைகளைத் தயாரித்து வருவாய் ஈட்டுகிறார்கள். . உணவு வகைகள் விலை 39 ரூபாயில் தொடங்கி 79 வரை உள்ளது.

""வேலை பார்க்கும் இளைய தலைமுறைக்கு உணவு என்பது பிரச்னையாகியுள்ளது. விரும்பிய உணவு எப்போதும் அலுவலகத்திற்கு அருகிலேயோ அல்லது தங்கும் இடத்துக்கு அருகிலேயோ கிடைக்காத தருணங்களில் இந்த மின் உணவுப் பெட்டிகள் கை கொடுக்கின்றன. மின் உணவுப் பெட்டியில் வழங்கப்படும் உணவு வகைகள் முழுக்க முழுக்க வீட்டில் தயாராகின்றன. உணவு வகைகளின் தரத்தை அவ்வப்போது ஆய்வு செய்யக் கண்காணிப்பாளர்களும் உண்டு.

அலுவலகங்களில் தேநீர் காப்பி வெண்டிங் மெஷின்கள் வைப்பது போல மின் உணவுப்பெட்டியையும் வைத்துவிட்டால், வேலை செய்பவர்கள் தங்கள் விரும்பும் உணவுக்காக அலைய வேண்டாம். அலுவலக வளாகத்திலேயே கிடைக்கும். இந்த முறையில் இனிப்பு கார வகைகளும் ஆர்டர் செய்து மின் உணவுப் பெட்டி மூலமாகப் பெறலாம். இந்த மாதிரி உணவு ஏ.டி.எம் பெட்டிகளை மருத்துவமனைகளிலும், விடுதிகளிலும் வைத்துள்ளோம். இந்தப் பெட்டிகள் ‘ஐஞப’ தொழில் நுட்பத்தில் இயங்குகின்றன'' என்கிறார் தில்லியைச் சேர்ந்த பிரேர்னா கல்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com