மண் சாலை பந்தயக் கதை
By DIN | Published On : 21st March 2021 06:00 AM | Last Updated : 21st March 2021 06:00 AM | அ+அ அ- |

இந்தியாவின் முதல் மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படமாக உருவாகி வருகிறது "மட்டி'. டாக்டர் பிரகபல் எழுதி, இயக்கிவுள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே 7 கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
யுவன், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""மோட்டார் வாகன பந்தயத்தை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளது. மண் சாலையில் நடக்கும் பந்தயத்தை மையமாக வைத்து ஹாலிவுட்டில் பல படங்கள் வந்திருந்தாலும் இந்தியாவில் தயாராகி உள்ள முதல் படம் இது. 14 காமிராக்கள் வைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் படமாக இருக்கும். இது அட்வென்சர் மூவி. இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார் ."ராட்சசன்' பட எடிட்டர் சன்லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ரவி பசுருர் இசையமைக்கிறார்.
கேரளா - தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. காட்சிகள் உண்மை சம்பவங்களாக படமாக்கப்பட்டிருக்கிறது. காட்சிகள் படமாக்கப்படும்போது எந்த ஒரு டூப்பும் பயன்படுத்தவில்லை . உரிய படப்பிடிப்புத் தளங்களைக் கண்டுபிடிக்கவே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது'' என்றார் இயக்குநர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...