மர சைக்கிளுக்கு மவுசு

பஞ்சாப் மாநிலத்தின் ஜிர்காபூர் பகுதியைச் சேர்ந்தவர் தனி ராம் சக்கு. கரோனா வைரஸ் காரணமாக  வேலையை இழந்த ஏராளமானோரில் இவரும் ஒருவர்.
மர சைக்கிளுக்கு மவுசு


பஞ்சாப் மாநிலத்தின் ஜிர்காபூர் பகுதியைச் சேர்ந்தவர் தனி ராம் சக்கு. கரோனா வைரஸ் காரணமாக  வேலையை இழந்த ஏராளமானோரில் இவரும் ஒருவர்.  சுற்றுச்சூழலுக்கு உகந்த மரத்தின் மூலம் சைக்கிள்  ஒன்றை உருவாக்கியுள்ளார்
""பொது முடக்கம் காரணமாக“கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. என்னுடைய நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடவும் புதிய திறன்களைக் கற்கவும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் விரும்பினேன். ஆனால் வீட்டில் இருந்த பிளைவுட், கருவிகள், பழைய சைக்கிள்கள் போன்றவற்றைக் கொண்டே புதுமை படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனது  படைப்பாற்றல் திறனைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுமையான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளேன்.  
சைக்கிள் குறித்தும் அது இயங்கும் விதம் குறித்தும் புரிந்துகொள்வது எளிதாகவே இருந்துள்ளது. நான் சைக்கிள் கடைகளில் அதிக நேரம் செலவிடுவேன். இதற்கு முன்பு நான் சைக்கிள் உருவாக்கியதில்லை. ஆனால் என் நண்பர்கள் சைக்கிளை முழுமையாக பிரித்துப் போட்டு மீண்டும் அதே பாகங்கள் கொண்டோ அல்லது சில மாறுதல்களுடனோ சைக்கிளை ஒன்றிணைப்பதைப் பார்த்திருக்கிறேன். சில பிளைவுட்களை எடுத்து சைக்கிளின் முக்கிய வடிவங்களைத் தரக்கூடிய பாகங்களை உருவாக்கினேன். பழைய சைக்கிளின் செயின், பெடல், சக்கரம், இருக்கை, ஸ்டாண்ட் போன்றவற்றை மர பாகங்களுடன் பொருத்தினேன். இதனுடைய முன்
வடிவத்தை உருவாக்க  ஒரு மாதம் ஆனது. 
இந்த சைக்கிள் 20 முதல் 22 கிலோ எடை கொண்டது. இதன் எடையை மேலும் குறைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். ரிம் பிரேக் பயன்படுத்துவதற்கு பதிலாக டிஸ்க் பிரேக் பயன்படுத்தி வருகிறேன். கியர்களை இணைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். குழந்தைகளுக்கான சைக்கிளையும் வடிவமைத்து வருகிறேன். ஒரு சைக்கிள் 15,000 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சைக்கிளில் ஒரு நாளைக்கு 25 கி.மீட்டர் வரை பயணிக்கலாம். ஆனால் இதன் தனித்துவமான காட்சியமைப்பு மக்களிடையே ஆர்வத்தையும் உற்சாகத்தையும் வரவழைத்துள்ளது. 
தென்னாப்பிரிக்கா, கனடா, ஜலந்தர், டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான ஆர்டர்களைப் பெற்று வருகிறார் தனி ராம் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com