அறிந்து கொள்ளுங்கள் : இந்திய ரயில்வே!

இந்திய ரயில்வே போக்குவரத்து உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய ரயில்வே அமைப்பாகும்.
அறிந்து கொள்ளுங்கள் : இந்திய ரயில்வே!

இந்திய ரயில்வே போக்குவரத்து உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய ரயில்வே அமைப்பாகும்.

1853-ஆம் ஆண்டில் இந்தியாவில் ரயில் போக்குவரத்து மும்பை- தாணே வழித்தடத்தில் தொடங்கியது. 1947 வரை 42 ரயில் ரயில் போக்குவரத்துத் தொகுதியில் 37 தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டன.  1951-ஆம் ஆண்டு அனைத்து ரயில் போக்குவரத்துகளையும் ஒருங்கிணைத்து நாட்டுடைமையாக்கப்பட்டு, "இந்திய ரயில்வே' எனப் பெயரிடப்பட்டது.

63 ஆயிரத்து 273 கி.மீ. நீளமுள்ள ரயில் பாதை உள்ளது.  7 ஆயிரத்து 25 ரயில் நிலையங்கள் உள்ளன. 

நாள்தோறும் 20 மில்லியன் பயணிகளையும், இரண்டு மில்லியன் சரக்குகளையும் இந்திய ரயில்வே ஏற்றி செல்கிறது.

தில்லியை தலைமையிடமாகக் கொண்டு, நாட்டில் உள்ள அனைத்துத் துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் பல்வேறு பகுதிகளோடு இணைக்கிறது.

மிக அதிவேக விரைவு ரயில்:

போபால்- சதாப்தி விரைவு ரயில் போபால்- தில்லி வரை செல்கிறது.  மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில்தான் நாட்டிலேயே மிக அதிவேக விரைவு ரயில்.

போக்குவரத்து மண்டலங்கள்: இந்திய ரயில்வே போக்குவரத்து 17 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மண்டலங்கள்- தலைமையகம்

மத்திய ரயில்வே - மும்பை
கிழக்கு ரயில்வே- கொல்கத்தா
கிழக்கு மத்திய ரயில்வே- பாட்னா
கிழக்கு கடற்கரை ரயில்வே- புவனேசுவரம்
கொங்கன் ரயில்வே-  நவி மும்பை
வடக்கு ரயில்வே- தில்லி
வடமேற்கு ரயில்வே- ஜெய்ப்பூர்
வடக்கு மத்திய ரயில்வே- அலகாபாத்
வடகிழக்கு ரயில்வே- கோரக்பூர்
வட எல்லையோர ரயில்வே- மாலிகான்
தெற்கு ரயில்வே- சென்னை
தெற்கு மத்திய ரயில்வே- செகந்திரபாத்
தென்கிழக்கு ரயில்வே- கொல்கத்தா
தென் கிழக்கு மத்திய ரயில்வே- பிலாஸ்பூர்
தென் மேற்கு ரயில்வே - ஹுப்ளி
மேற்கு ரயில்வே- மும்பை
மேற்கு மத்திய ரயில்வே- ஜபல்பூர்
புறநகர் ரயில் போக்குவரத்து:

மும்பை, சென்னை, கொல்கத்தா, தில்லி நகரங்களில் புறநகர் ரயில் போக்குவத்துக்காகத் தனியாக ரயில் பாதைகள் உள்ளன. 

கான்பூர், ஹைதராபாத், புணே ஆகிய நகரங்களில் புறநகர் ரயில் போக்குவரத்துக்கு என்று தனியாக ரயில்பாதைகள் இல்லை. அவை நீண்ட தொலைவு செல்லும் ரயில் பாதைகளையே பயன்படுத்துகின்றன.
மின்சார ரயில் 9 பெட்டிகளைக் கொண்டிருக்கும்.

மெட்ரோ ரயில் :

"மாஸ் ராபிட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்-எம்.ஆர்.டி.எஸ். என்பது மெட்ரோ ரயில். சென்னை மெட்ரோ ரயில் என்பது உயரத்தில் அமைக்கப்பட்ட ரயில் பாதையாகும். மெட்ரோ ரயில்கள் அரசால் நிர்வகிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com