பண்பாட்டு முரண்கள்...

இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் முபீன் சாதிகா.  கவிதைகள்,  கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், என இவரின் தமிழ்ப் பணி அளப்பரியது.
பண்பாட்டு முரண்கள்...

இலக்கிய ஆளுமைகளில் ஒருவர் முபீன் சாதிகா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், என இவரின் தமிழ்ப் பணி அளப்பரியது. எழுத்துப் பணிக்காக, இலக்கிய வீதியின் அன்னம் விருது, 2019-ஆம் ஆண்டுக்கான விமர்சன விருதுகளைப் பெற்றுள்ளவர் இவர்.

அவரிடம் பேசியபோது:

"கோவை மாவட்டத்தில் பிறந்தேன். அம்மா இல்லத்தரசி. அப்பா மருந்தாளுநராக, தமிழ்நாடு அரசில் வேலை பார்த்தவர். எனது அண்ணன் நிஜந்தன், ஊடகவியலாளர். கோவை மாவட்டத்தில் சிறு வயதில் மருத்துவத் துறையினருக்கான குடியிருப்பில் வளர்ந்தேன். நான்காம் வகுப்புப் படிக்கும்போது, எனது அப்பாவின் வேலை மாற்றல் காரணமாக, சென்னைக்கு வந்தேன்.

பள்ளியில் படிக்கும்போது மத, சாதிய ரீதியிலான பாகுபாட்டை அனுபவித்திருக்கிறேன். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போதிலிருந்து, கல்லூரி வரை சில அனுபவங்களை எதிர்கொண்டதால், உள்ளுணர்வு, டெலிபதி போன்ற திறமைகள் உருவாயின.

எத்திராஜ் மகளிர் கல்லூரியில் வேதியியல் பயின்று, பின்னர் தமிழ் இலக்கியத்தில் முதுகலையும் அதே கல்லூரியில் பயின்றேன். ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை சென்னைப் பல்கலைக் கழகத்தில் முடித்தேன். ஆங்கிலத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்யும் ஆர்வம் கொண்டு புதுக் கல்லூரியில் சேர்ந்தேன்.

துருக்கிய நாவல்களிலும் தமிழ் நாவல்களிலும் உள்ள எதிர் பண்பாட்டு முரண்களும் செயல்பாட்டுத் தன்மையும் என்ற கருத்தை ஆழமாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன்.

இதற்காக, ஓரான் பாமுக்கின் இரு புதினங்கள், எலிஃப் ஷஃபக்கின் புதினம், தமிழில் தமிழவன், சல்மா, நிஜந்தன் ஆகியோரின் புதினங்களை ஒப்பீட்டுக்காகத் தேர்வு செய்தேன்.

அரசியல், மதம், சாதி, பெண் ஒடுக்குமுறை போன்ற பண்பாட்டு, சமூகக் கூறுகளில் காணப்பட்ட எதிர்ப்புணர்வையும் அதற்குத் தேவைப்பட்ட செயற்பாட்டுத் தன்மையும்இந்தப் புதினங்களில் எப்படி வெளிப்படுகிறது என்பதைக் கண்டறிந்தேன். அதுமட்டுமல்லாமல் துருக்கியச் சமூகத்துக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் இருக்கக் கூடிய ஒற்றுமை, வேற்றுமைகளை இந்தப் புதினங்கள் வழியில் கண்டறிந்தேன்.

"அன்பின் ஆறாமொழி' , " உளம் எனும் குமிழி' ஆகிய இரு கவிதைத் தொகுப்புகள், "நூறு புராணங்களின் வாசல்'என்ற இரு குறுங்கதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்.

என்னை கவிஞர் சண்முகம் நேர்காணல் கண்டது, "உறையும் மாயக் கனவு' என்ற தலைப்பில் நூலாக வந்திருக்கிறது.

மலேசியக் கவிஞர்களுடன் இணைந்து காரைக்குடியில் நடைபெற்ற கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில், 40 தமிழ்ப் பெண் கவிஞர்களின் படைப்புலகம் குறித்து தொகுத்து 40 நூல்களை வெளியிட்டுள்ளேன்.

டெல்யூஜ், கத்தாரி, மசூமி, ஹிமேனா கானெலிஸ், டேனியல் ஸ்மித், ஜுடித் பட்லர்,ழான் புத்ரியா, ழாக் டெரிடா, ஹெலன் சிக்ஸþஸ், ப்ரூனோ லாட்டூர், லூச் இரிகரை,ஜார்ஜியோ அகம்பென், ழாக் லக்கான், தெக்கார்த், ரோஸா லக்ஸம்பர்க், ஜிஜெக் உள்ளிட்ட பல அறிஞர்களின் கோட்பாடுகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

மும்பை, சென்னையில் டாடா சமூகவியல் நிறுவனங்களில் "தமிழ் நவீன ஓவியங்கள்' , "உள்ளுணர்வு மூலம் தொடர்புறுத்தம்' குறித்தும் கட்டுரை வசித்தேன்.

அது ஆங்கிலத் தொகுப்பு ஒன்றிலும் இடம்பெற்றிருக்கிறது. தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் "குடியுரிமை மசோதா' குறித்து கட்டுரை வாசித்துள்ளேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com