கலாசார மதிப்பீடுகள்

மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் " தீ - இவன்' நீண்ட இடைவெளிக்குப் பின் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.
கலாசார மதிப்பீடுகள்

மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் " தீ - இவன்' நீண்ட இடைவெளிக்குப் பின் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுகன்யா நடிக்கிறார். சுமன்,  சன்னி லியோன், அத்திகா, அபிதா, யுவராணி, ராதாரவி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும்போது... ""ஆம்பள கெட்டா வாழ்க்கை போச்சு பொம்பள கெட்டா வம்சமே போச்சு என்று சொல்வார்கள். அதன்படி ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஆணோ, பொண்னோ கலாசாரம் மீறி படி தாண்டி விட்டால். அது அவர்கள் வாழ்வை மட்டுமல்ல அவர்கள் சந்ததியையே சமாதி ஆக்கிவிடும்.

ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன.  இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். 

இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். நள்ளிரவில் பைக் மறிக்கும் விலை மாதுவுக்குப் பின் ஒரு ரம்மியமான காதல் இருந்திருக்குமோ. வறுமை, ஆதிக்க சக்திகளின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளை பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும் கதை இது'' என்றார் இயக்குநர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com