மழைக்காலம் உஷார்..

மழைக்காலம் என்றாலே வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், பல நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. 
மழைக்காலம் உஷார்..

மழைக்காலம் என்றாலே வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், பல நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

 எனவே உணவைப் பச்சையாக உண்பதைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உப்பு கலந்த நீரில் சுத்தம் செய்தவுடன் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

மழைக்காலத்தில் செரிமானச் சக்தி குறையும்.  எனவே செரிமானத்தைத் தாமதமாக்கும் உணவைத் தவிர்க்க வேண்டும்.

சமைத்த உணவுகளை மூடி வைக்கவும்.

குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கவும்.

சமைத்த உணவுகளைச் சூடாக சாப்பிடவும்.

பழங்கள்,  காய்கறிகள்,  தானியங்கள்,  சத்து பானங்கள் போன்றவற்றை சாப்பிடுவது  மிகவும் சிறப்பாகும்.

தேநீர் அருந்தும்போது, இஞ்சி, சுக்கு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு பருகுவதால் உடலுக்குத் தெம்பு தரும்.

வயதானவர்கள் பாதுகாப்பாக இருக்க..

வீட்டுக்குள் நடந்தாலும் வயதானவர்கள் மிகவும் மெதுவாக கவனமாக நடக்க வேண்டும்.

வாக்கிங் ஸ்டிக் வாக்கர் போன்றவற்றை உபயோகிப்பது நல்லது.

முக்கியமாக,  பாத்ரூம் செல்லும்பொழுது மிகுந்த கவனம் தேவை.

மழைக்காலத்தில் கூடுதலாக மிதியடிகளை போட்டு வைப்பது பாதுகாப்பானது.

மருத்துவ ஆலோசனை

மழைக்காலத்தில் காது வலி வந்தால் அவற்றை இயர் டிராப்ஸ் மூலம் குணப்படுத்தவும்.

தொண்டை வலி ஏற்பட்டால்,  வெதுவெதுப்பான வெந்நீரில் கல் உப்பை போட்டு கொப்பளித்து வர சரியாகிவிடும்.

முதலுதவிப் பெட்டியை வீட்டில் வைத்துக் கொள்வது நல்லது .

பேண்டு எய்டு, பேண்டேஜ் துணி, பஞ்சு, தீயணைப்பு மருந்து, அடிபட்டால் போடுவதற்கான மருந்து , போன்றவற்றை வைத்திருந்தால் அவசரத்துக்குக் கைகொடுக்கும்.

கர்ப்பிணிகள்,  குழந்தைகள்,  வயதானவர்கள் வீட்டில் இருந்தார்கள் என்றால் ஆம்புலன்ஸ் உதவி எண்ணை குறித்து வைப்பது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com