லட்சுமி தேவி கோயில்...!

தொட்டகடவல்லி லட்சுமி தேவி கோயில் ஹொய்சலா கோயில்களில் ஒன்றாகும். தென் இந்தியாவில் லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் பெரிய கோயில் இதுவாகும்.
லட்சுமி தேவி கோயில்...!

தொட்டகடவல்லி லட்சுமி தேவி கோயில் ஹொய்சலா கோயில்களில் ஒன்றாகும். தென் இந்தியாவில் லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதல் பெரிய கோயில் இதுவாகும்.

ஹொய்சாலா வம்சத்தால் கட்டப்பட்ட ஒரே சதுஷ்கூட (நான்கு சந்நிதிகள்) கோயில் இதுவாகும். இங்குள்ள பல கட்டடக்கலை அம்சங்கள் மற்ற ஹொய்சாள கோயில்களில் காணப்படவில்லை. கல்வெட்டுகளின்படி இந்த இடம் "தொட்டகடவல்லி காடும்பள்ளி' என்று அழைக்கப்பட்டது.

கி.பி. 1113-இல் விஷ்ணுவர்தன ஆட்சியின்போது, பணக்கார வணிகர் குல்லஹனா ராஹுதா, அவரது மனைவி சஹஜ் தேவி ஆகியோரால், சிற்பி மல்லோஜா மானியோஜா மேற்பார்வையில் கோயில் கட்டப்பட்டது. தற்போது கோயிலை இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது.

ஹாசன் - பேலூர் சாலையில் இருந்து 2.5 கி.மீ. தொலைவிலும், ஹாசனிலிருந்து 20.7 கி.மீ. தொலைவிலும், பேலூரில் இருந்து 24.5 கி.மீ. தொலைவிலும் கோயில் உள்ளது.

ஹாசன் மாவட்டத்தில் உள்ள மூன்று கோயில்களை உள்ளடக்கிய ஹொய்சாலாளர்களின் புனிதக் குழுமங்கள் - யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் ஹொய்சாலா கோயில்கள் இந்தியாவின் 42-ஆ வது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக உள்ளன.

கோயில்களில் உள்ள அற்புதமான சிற்பங்கள், சோப்ஸ்டோன், குளோரிடிக் ஸ்கிஸ்ட் ஆகியவற்றால் செய்யப்பட்டவை, ஹொய்சலா வம்சத்தின் மன்னர்கள் கட்டடக் கலைகளில் மேதையாக திகழ்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com