தங்க தோசை!

ஹைதராபாத்தில் ஒரு தோசை ரூ.1000-க்கு  விற்கப்படுகிறது என்றால் ஆச்சரியம்தானே! உணவு விடுதிகளில் கிடைக்கும் தோசைகளில்,  அதன் தரம், அளவுக்கு ஏற்ப  விலை மாறுபடும்.
தங்க தோசை!


ஹைதராபாத்தில் ஒரு தோசை ரூ.1000-க்கு  விற்கப்படுகிறது என்றால் ஆச்சரியம்தானே! உணவு விடுதிகளில் கிடைக்கும் தோசைகளில்,  அதன் தரம், அளவுக்கு ஏற்ப  விலை மாறுபடும்.  பொதுவாக,  தோசையின் விலை அதிகபட்சம் ரூ.150 வரை விற்கிறது.  ஆனால்,  ஒரு தோசை ரூ.1000-க்கு விற்கவும் காரணம் இருக்கிறது.  தோசையுடன்   தங்கத்தாலான   ஜரிகைத் தாள் இரண்டு வைத்து வழங்கப்படுவதுதான்.

இனிப்பு வகைகளில்  வெள்ளி ஜரிகைத் தாள் ஒட்டி விற்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை  வெள்ளியில் செய்யப்படுவதில்லை.  ஆனால் 
இந்தத் தங்க ஜரிகைத் தாள் 24  காரட்  சுத்தத்  தங்கத்தில்  உருவாகிறது என்கிறார்கள்.

ஹைதராபாத்   பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் செயல்படும்   "ஹவுஸ் ஆஃப் தோசாஸ்'  என்ற உணவகத்தில்  தங்க  தோசையை விற்பனை செய்யப்படுகிறது.  உணவகத்தில் தங்க ஜரிகைத்தாள்  வைக்கப்பட்ட  தோசையை சாப்பிட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தங்க தோசை அதிகமாக விற்பனை ஆகிறது.  தங்கம் பூசப்பட்ட தோசைகளை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பிறகே  தயார் செய்கின்றனர். சராசரியாக, ஒரு நாளைக்கு 6 முதல் 8 தோசைகள் விற்பனை ஆகின்றன. 

ஸ்பெஷல் தோசை தயாரித்த பிறகு,  அதில் சுத்தமான நெய் தடவி   24 காரட் தூய தங்க ஜரிகைத்தாளை  தோசையில்  ஒட்டி  வழங்குகிறார்கள். தோசையில் தங்க ஜரிகைத் தாள் வைப்பதால்தான் இந்த அதிக விலை.  தங்க தோசையுடன் வறுத்த முந்திரி, பாதாம், தூய நெய், பொடி வகைகள், சுவையான  வெரைட்டியான சட்னி ஆகியவற்றை  வழங்குகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com