நேரில் வந்த ஜப்பான் ரசிகை  

முதல் பாகத்தைப் போலவே  'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகமும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. 
நேரில் வந்த ஜப்பான் ரசிகை  

முதல் பாகத்தைப் போலவே  'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகமும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. 
வெளிவந்த முதல் இரு நாள்களிலேயே சுமார் ரூ.100 கோடி வசூல் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இந்தப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக தம்பதி சகிதமாக ஜப்பானிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார் நடிகர் கார்த்தியின் ரசிகை. 
பொதுவாக,  ரஜினிக்குதான் ஜப்பானில் அதிக ரசிகர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அதைத் தாண்டி தற்போது கார்த்திக்கு ஜப்பானில் ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. 
ஜப்பானிலிருந்து வருகை புரிந்த தெருமி ககுபரி ஃபுயுஜிடாவை நடிகர் கார்த்தி தனது வீட்டுக்கு வரவைத்து அவருக்கு உணவு பரிமாறி உரையாடி மகிழ்ந்துள்ளார். 
இந்தச் சந்திப்பு குறித்து ரசிகை தெருமி ககுபரி ஃபுயுஜிடா கூறுகையில்,  
"நான் வேலை நிமித்தமாக சில காலம் இந்தியாவில் தங்கியிருந்தேன். அப்போது தமிழ் படங்களைப் பார்ப்பேன். அது முதல் நான் கார்த்தியின் தீவிர ரசிகை. 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தது. அதில் கார்த்தி நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் ஜப்பானில் வெளியாக காலமாகும் என்பதால் உடனே பார்த்தாக வேண்டும் என்று அங்கிருந்து கிளம்பி வந்தோம். மிக அட்டகாசமான படம்'' என்றார்.
 நடிகர் கார்த்தி கூறுகையில் "மிக சந்தோஷமான அனுபவம்.  அவருடன் பல விஷயங்கள் உரையாடினேன். அவரின் சினிமா பார்வை ஆச்சரியம் தந்தது.  அடுத்து நான் நடித்து வருகிற படத்தின் பெயர் ஜப்பான் என்றதும் இன்னும் சந்தோஷப்பட்டார்'' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com