மகிழ்ச்சிக்குள்ளாக்கும் நீராவிக் குளியல்

உலகின் மகிழ்ச்சியான நாடான பின்லாந்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான சானாக்கள் உள்ளன.  "சானா' என்றால் நீராவிக் குளியல்.  இந்த நாட்டின் மக்கள் தொகையோ சுமார் 55 லட்சம் பேர்தான். 
மகிழ்ச்சிக்குள்ளாக்கும் நீராவிக் குளியல்

உலகின் மகிழ்ச்சியான நாடான பின்லாந்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான சானாக்கள் உள்ளன.  "சானா' என்றால் நீராவிக் குளியல்.  இந்த நாட்டின் மக்கள் தொகையோ சுமார் 55 லட்சம் பேர்தான்.

இந்த நாட்டில் நீராவிக் குளியல் ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. கி.பி. 1112-ஆம் ஆண்டில் இருந்ததற்கு எழுத்துப்பூர்வ ஆதாரங்கள் உள்ளன.

சானாவுக்கான தலைநகரம் என்று அழைக்கப்படுவது டாம்பெரே. யுனெஸ்கோவின் பின்லாந்து சார்ந்த பாரம்பரிய லிஸ்டில் இந்த நகரமும், நீராவிக் குளியலும் இடம்பெற்றுள்ளது. இங்கு அரசு பொதுசானாக்கள் மட்டுமே சுமார் 55 உள்ளன.

மரத்தால் எரியவிட்டு., மின்சாரத்தால் சூடுபடுத்தி.., புகை மூலமாக.. என மூன்று விதமான சானாக்கள் உள்ளன.  நீராவியை உற்பத்தி செய்து, அறைக்குள் வழங்குதல்தான் இங்கு சிறப்பு. உலர்ந்த சூடு என்றால், 15 நிமிடங்களுக்கு மேல் சானா அறையில் இருப்பது கஷ்டம்.  பொதுவாக, 10 நிமிடங்களுக்கே பலர் வெளியே வந்துவிடுவர்.

பின்லாந்து மக்களில் 95 சதவீதம் பேர் வாரம் ஒருமுறையாவது சானாவுக்குச் செல்கின்றனர். இவர்களில் பலர் தங்களது வீடுகளிலேயே சானாக்களை அமைத்துள்ளனர். சானாவில் இருப்பதால்,  இதயம் பலப்படும், மன ஆரோக்கியம் கூடும், வலிகள் குறையும், நிம்மதி நிறையும் என்பது மக்களின் நம்பிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com