அனுபவம் புதுமை!

வீட்டு வசதி மேம்பாட்டுத் துறையில் இது ஒரு பொறியியல் புதுமை என்று சொல்லலாம்.
அனுபவம் புதுமை!

வழக்கமாக அடுக்குமாடிக் குடியிருப்புகள், வில்லா வீடுகளைக் கட்டி, விற்பனை செய்யும் கட்டுமான நிறுவனங்கள், தாங்கள் கட்டித் தரும் குடியிருப்புகள் குறித்த விபரங்கள், குடியிருப்பு வளாகத்தில் அவர்கள் உருவாக்கிக் கொடுக்கும் இதர பொதுவான வசதிகள், இலவசப் பரிசுகள் ஆகியன குறித்து விளம்பரம் கொடுப்பார்கள்.  சிலர் ஒரு படி மேலே போய், தங்கள் அலுவலகத்திலோ, அந்தக் குடியிருப்புகளின் மாதிரி வடிவத்தை பார்வைக்கு வைத்திருப்பார்கள். பெரிய குடியிருப்பு வளாகங்கள் என்றால் ஒரு மாடல் குடியிருப்பைக் கட்டி, வாடிக்கையாளர்கள் பார்க்க வழி செய்வார்கள். ஆனால், சென்னையின் முன்னணி வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனங்களில் ஒன்றாகிய 'டேக் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்' இதுவரை தென்னிந்தியாவில் யாரும் செய்திராத புதுமை ஒன்றைப் புரிந்துள்ளது.  

அது என்ன தெரியுமா? 'டேக் நிறுவனம்', 'டேக் மெடாலியன்' என்று சென்னை மேடவாக்கத்திலும், 'டேக் மார்ஷல்' என்று தாம்பரத்திலும் உருவாக்கத் திட்டமிருக்கும் குடியிருப்பு வளாகங்களில், வாடிக்கையாளர்களுக்கு புதுமையான வீட்டு அனுபவத்தை அளிக்கும் அனுபவ மையங்களை அறிமுகப்படுத்தி உள்ளன.  அதாவது, இங்கே தரை முதல் தளம் வரை அனைத்தையும்  குறுக்குவெட்டில் வாடிக்கையாளர்கள் காண முடியும்.  அந்த இல்லத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அத்தனை கட்டுமானப் பொருள்களையும் கண்களால் நேரிடையாகப் பார்க்க முடியும்; கைகளால் தொட்டுப் பார்க்க முடியும். இவைகளைத் தவிர இந்த அனுபவ மையங்களில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் முப்பரிமாண மாடலையும், மாடல் வீடுகளையும் காணலாம். 

இதுகுறித்து டேக் டெவலப்பர்ஸ்  நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சதீஷ் குமாரிடம் பேசினோம்:

இந்தப் புதுமைகளை அறிமுகப்படுத்தியதன் பின்னணி என்ன? 

வீட்டு வசதி மேம்பாட்டுத் துறையில் இது ஒரு பொறியியல் புதுமை என்று சொல்லலாம். இதன் மூலமாக சொந்தமாக ஒரு ஃப்ளாட் அல்லது  வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளருக்கு ஒரு புதுவித அனுபவம் கிடைக்கும்.  மேலும், இதனை  எங்களுடைய வாடிக்கையாளர் விழிப்புணர்வு முயற்சி என்றும்  குறிப்பிடலாம். ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் முக்கியம். எங்களுடைய   அனுபவ மையங்கள் இவற்றைத்தான் காட்சிப்படுத்துகின்றன. வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இது வலுப்படுத்தும். 

இத்தகைய அனுபவ மையங்களுக்கு அவசியம் என்ன?

பொதுவாக,  வீடு வாங்குபவர்கள் எப்போதும் விலையை ஒப்பிடுவது, அமைவிடத்தைத் தேர்ந்தெடுப்பது, மாதிரி வீடுகளைப் பார்வையிடுவது ஆகியவற்றின் அடிப்படியில்தான் வீடு வாங்குவது குறித்து முடிவுகளை எடுப்பார்கள். ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர், வீடுகளுக்காகக் கொடுக்கும் உத்தரவாதங்களை மட்டுமே அவர்கள் நம்ப வேண்டியுள்ளது. கட்டிடம் கட்டப் பயன்படுத்தப்படும் பொருள்கள் பற்றியும்,  வீட்டின் மற்ற கட்டுமானக் கூறுகள் பற்றியும் அவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வதைத் தவிர வாடிக்கையாளர்களுக்கு வேறு வழி இல்லை. ஆனால், இந்த மரபுகளை முற்றிலுமாக உடைத்து, மிகவும் வெளிப்படையாக, அனைத்து விவரங்களையும் நேரடியாக அனுபவித்துத் தெரிந்துகொள்ள எங்கள் நேரடி வீட்டு அனுபவ மையங்கள் உதவுகின்றன. 

இந்த மையங்கள், வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது  கனவு இல்லங்களில் கிடைக்கவிருக்கும்  ஒவ்வொரு பொருளின் தரம், விவரக்குறிப்பு பற்றிய முதல் தகவலை அவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, அவர்கள் இனிமேல் கண்மூடித்தனமாக, அறியாமையோடு வீடுகளை வாங்க வேண்டிய அவசியமில்லை. இனி அவர்கள் முடிவெடுப்பதற்கு முன் நேரடியாகப் பரிசோதித்து, தொட்டு அனுபவித்துப் பார்த்து வாங்க முடியும்

இந்தக் அனுபவ மையங்களில் எவற்றையெல்லாம் வாடிக்கையாளர்கள் நேரடியாகக் கண்டு, தொட்டு அனுபவித்துப் பார்க்க  முடியும்? 

ஸ்வீட் ஸ்டாலில் ருசி பார்க்க ஸ்வீட்டை எடுத்து, உடைத்து ஒரு துண்டு கொடுப்பார்கள்.  நாங்கள் வீட்டையே உடைத்து, டெமோ பீசாகக் காட்டுகிறோம். நேரடி வீட்டு அனுபவ மையங்கள் பதினோரு பிரிவுகளைக் கொண்டுள்ளன. இங்கு பார்வையாளர்கள் பல்வேறு அம்சங்களின் குறுக்குவெட்டுத் தோற்றம், இடைச்சுவர்கள், நெடுவரிசை தூண்கள், உத்தரத் தூண்கள், கதவுகள், ஜன்னல்கள், தரைகள், சுவிட்ச் பாக்ஸ்கள், பிளம்பிங் ஷாஃப்ட்கள், கைப் பிடிகள், மாடங்களின் தரை போன்ற வெளிப்புற கூறுகள் உள்பட பல்வேறு அம்சங்களின் குறுக்குவெட்டுகளை நேரடியாக ஆய்வு செய்யலாம்; அனுபவிக்கலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com