எட்டாவது கண்டம்

விண்வெளியில் புதிய கிரகங்களை அவ்வப்போது கண்டுபிடிக்கின்றனர். இப்போதைய சுவாரசியமான வித்தியாசமான கண்டுபிடிப்பு என்ன தெரியுமா?
எட்டாவது கண்டம்

விண்வெளியில் புதிய கிரகங்களை அவ்வப்போது கண்டுபிடிக்கின்றனர். இப்போதைய சுவாரசியமான வித்தியாசமான கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் உலகின் எட்டாவது கண்டத்தைக் கண்டுபிடித்துள்ளதுதான்!

இந்தப் புதிய கண்டம் 375 ஆண்டுகள் கடலுக்குள் மறைந்திருந்ததாகவும், இப்போது வெளிப்பட்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்தப் பகுதியில் கிடைத்திருக்கும் பாறைகளை ஆய்வு செய்ததில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

புதிய கண்டத்துக்கு "ஸீலந்தியா' என்று பெயர் சூட்டியிருக்கின்றனர். புதிய கண்டம் நியூஸிலாந்துக்கு அருகே இருப்பதால், நியூஸிலாந்து என்பதில் கொஞ்சம் எடுத்து புதிய பெயராக "ஸீலந்தியா". இதில், "இந்தியா' வின் "ந்தியா' வும் சேர்ந்துள்ளது.

சுமார் 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளதாகக் கூறப்படும் இந்தக் கண்டத்தின் 94 சதவீதப் பகுதி பசிபிக் பெருங்கடலுக்குள் மூழ்கியுள்ளது. மூழ்கிக் கிடக்கும் பரப்பில் நியூஸிலாந்து போன்ற தீவுகள் சிலவும் உள்ளதாம். புதிய கண்டம் நியூஸிலாந்து தீவைவிட சுமார் 23 மடங்கும், மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கும் பெரியது என்கின்றனர். உலகில் தற்போதைய ஏழு கண்டங்களான ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகாவுடன் எட்டாவது கண்டமாக "ஸீலந்தியா' இணைகிறது.

3,500 அடி கடலுக்குள் கீழ் அமைந்திருக்கும் "ஸீலந்தியா' எப்படி கடலுக்குள் மூழ்கியது அல்லது கடலுக்குள் இருந்த நிலப்பரப்பின் ஒரு முனை (படத்தில் பழுப்பு நிறத்தில் தெரிவது) எப்படி வெளிவந்தது குறித்த ஆய்வுகள் நடக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com