வழிகாட்டி..!

ஆயிரக்கணக்கானோருக்கு சத்தமின்றி கல்வி, வேலைவாய்ப்பு  உதவிகளைச் செய்து,  புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் அளித்துவருகிறார் இளைஞர் ஆனந்தன் அய்யாசாமி.
வழிகாட்டி..!

ஆயிரக்கணக்கானோருக்கு சத்தமின்றி கல்வி, வேலைவாய்ப்பு  உதவிகளைச் செய்து,  புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் அளித்துவருகிறார் இளைஞர் ஆனந்தன் அய்யாசாமி.

"தனக்கு கிடைத்த உயரிய இடம் பிறருக்கும் கிடைக்க வேண்டும்'  என செயல்படும்  சிலரில் ஒருவர்தான் ஆனந்தன் அய்யாசாமி.   தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட சிவகிரி அருகேயுள்ள விஸ்வநாதபேரி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த இவர்,    "வாய்ஸ் ஆஃப் தென்காசி' அமைப்பின் நிறுவனராக இருந்துவருகிறார்.

ஐரோப்பாவில் தொழில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்றான எஸ்டோனியாவை முன்மாதிரியாகக் கொண்டு,  தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கில் ஆனந்தன் அய்யாசாமியின் முயற்சியில் கடந்த மார்ச் மாதத்தில் "ஸ்டார்ட்  அப் தென்காசி'  கருத்தரங்கம்  நடைபெற்றது. இதில்,  நாட்டின் 111 கல்லுôரிகளில் இருந்தும்,  தில்லி, சென்னை, மும்பை, ஜார்க்கண்ட் ஐ.ஐ.டி.க்களில் இருந்தும் போட்டியாளர்கள், ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர் பங்கேற்றனர். இவர்களில் 200-க்கும் அதிகமான படைப்புகளைப் பார்வையிட்டு,  20 திறமையாளர்கள் தேர்ள செய்யப்பட்டனர்.

உள்ளூரில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கும் உத்வேகத்தில் உள்ள இளைஞர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி, அவர்களது தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து கொண்டிருக்கிறார் ஆனந்தன் அய்யாசாமி.

அமெரிக்காவின் ஒரேகான் மாகாண தமிழ்ச் சங்க  இயக்குநராகளம், "பிரைம் லியாலிட்டி' என்ற குழும நிர்வாகியாகளம் உள்ள அவருக்கு "இந்தியாவின் பெருமைக்குரிய மனிதர்'  என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி வழிகாட்டியாகத் திகழும் ஆனந்தன் அய்யாசாமியிடம் பேசியபோது:

விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப்படிப்பை உள்ளூரில் முடித்தேன். திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பொறியியல் படித்தேன். அமெரிக்காவில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றேன்.  அமெரிக்காவின் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் உயர்பதவி கிடைத்தது.   எனது பணி ஈடுபாட்டை பார்த்தளடன்  வேறொரு  நிறுவனம் இயக்குநராகப் பணியமர்த்தியது.

"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்' என்ற திருக்குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்திட நினைத்தேன்.

பிறப்புக்கும், சாதனைக்கும் சம்பந்தம் இல்லை. ஒருவர் சாதனையாளராக முத்திரைப் பதிக்க வேண்டும் என்றால், வலுவான பின்புலம், குடும்பப் பாரம்பரியம், செல்வ வளம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், உழைப்புக்கும், கல்விக்கும் சாதனையில் சம பங்குண்டு.

உழைப்புதான் உயர்வைத் தரும்.  அத்தகைய நம்பிக்கையுடன் உழைக்கும் இந்திய மாணவர்கள்,  இளைஞர்களை உருவாக்களம் முயற்சி மேற்கொண்டேன்.  அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்ய வாய்ஸ்  ஆஃப் தென்காசி, மாற்றம்-முன்னேற்றம் பளண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகளை தொடங்கினேன்.

இந்த அமைப்புகளின் மூலம் வறுமை, ஏழ்மை மற்றும் பெற்றோர் இல்லாமல் தவிக்கும் நுôற்றுக் கணக்கான பள்ளி, கல்லுôரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவது, நோட்டு புத்தகம் வழங்குவது, இலவச கண் சிகிச்சை முகாம், இலவச மருத்துவ முகாம், நாட்டுப் புறக் கலைகளை ஊக்குவிப்பது, கிராமிய கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறேன். 

விளையாட்டில் திறமையான  மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களின் திறன் மேம்பாட்டுக்கு உதவி செய்வதுடன், போட்டிகளை முன்னெடுத்து நடத்துகிறேன். வெற்றி பெறுவோரை  மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். 

அத்துடன் யோகாவில் சிறந்து விளங்கும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களது சாதனை முயற்சியை உலக அளவில் கொண்டு வரளம் போட்டிகளை நடத்தி வருகிறேன். 

பெண் குழந்தைகளுக்காக  செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், நுôற்றுக் கணக்கான பெண் குழந்தைகளுக்கு இலவசமாக சேமிப்புக் கணக்குத் தொடங்கியுள்ளேன்.

மகளிர் கல்லுôரிகளுக்குச் சென்று  அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுத்து வருகிறேன்.  மாணவிகளிடம் கலந்துரையாடி கல்வி கற்றலில் ஏதேனும் தடைகள் இருந்தால்,   உளவியல் ஆலோசனை, உதவிகளை அளிக்கிறேன். 

"நீங்களும் ஆகலாம் ஐஏஎஸ்'  என்ற விழிப்புணர்ள நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறேன். போட்டி தேர்ளகளில் பங்குபெறும் மாணவர்களுக்கான புத்தகங்களையும் வழங்கி வருகிறார். 

பிரபல மென்பொருள் நிறுவனர்  ஸ்ரீதர் வேம்புளம்  நல்ல ஆலோசனைகளை அளித்துவருகிறார்'' என்றார்,.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com