உழைப்பாளர் தினம்

சிங்கப்பூரில் பிரதிபலிக்கும் தொழிலாளர் வாழ்வியல்
உழைப்பாளர் தினம்

நம்பிராஜன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "உழைப்பாளர் தினம்'. சந்தோஷ் நம்பிராஜன் கதாநாயகனாக நடிப்பதுடன் இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இதற்கு முன்பு தேசிய விருது பெற்ற "டூ லெட்' படத்தின் கதாநாயகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து காதலிசம், வட்டார வழக்கு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இவருக்கு இது நான்காவது படம் ஆகும். கதாநாயகியாக குஷி நடிக்கிறார். சிங்கப்பூர் துரைராஜ், கார்த்திக் சிவன், இயக்குநர் தி.சம்பத்குமார், அன்புராணி, கேசவன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... "

"குடும்பத்திற்காக பணம் சம்பாதிக்க வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்வியலையும் அவர்களின் தியாகத்தையும் சொல்லும் விதமாக மிகவும் ஜனரஞ்சகமான முறையில் காதல், நகைச்சுவை, அரசியல்

நையாண்டிகளுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கம்யூனிச சித்தாந்தங்களை எளிய மக்களுக்கு புரியும் வகையில் யதார்த்தமாக கதைக் கரு படமாக்கப்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களின் அரசியலை இப்படம் பேசுகிறது. சிங்கப்பூரின் பெருமைகளையும் சிங்கப்பூர் வெளிநாட்டு தொழிலாளர்களின் அயராத உழைப்பின் பெருமைகளையும் பறைசாற்றும் வகையில் "அழகான சிங்கப்பூரு' என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப்பாடலை எழுதியவர் சிங்கப்பூர் வெளிநாட்டுத் தொழிலாளர் சிங்கை சுந்தர்.

படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. உழைப்பாளர்களின் வாழ்வியலை போற்றும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், உழைப்பாளர் மாதமான மே மாதத்தில் திரைக்கு வரவுள்ளது'' என்றார் இயக்குநர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com