சினிமாவாகும் ராமதாஸ் வாழ்க்கை

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது என்று பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது.
சினிமாவாகும் ராமதாஸ் வாழ்க்கை

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது என்று பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில், லைகா நிறுவனம் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக்குவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. லைகா நிறுவனம் தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக பிரமாண்ட படங்களை தயாரித்து வருகிறது. பிப் 9 }ஆம் தேதி லைகா நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் லால் சலாம் திரைக்கு வருகிறது. ரஜினியின்  வேட்டையன் படத்தையும் அவர்களே தயாரித்து வருகின்றனர். இவர்கள் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கைக் கதையை படமாக்க உள்ளனர். இதனை சேரன் இயக்குவார் என கூறப்படுகிறது. 

சேரன் தற்போது ஜர்னி என்ற விவசாயத்தை மையப்படுத்திய இணையத்தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இது சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  இந்த தொடருக்கு வெகுவான வரவேற்பும் கிடைத்துள்ளது. அடுத்து கன்னட நடிகர் சுதீப் நடிப்பில் தமிழ், கன்னடத்தில் ஒரு படத்தை இயக்குகிறார் சேரன். இதற்குப் பிறகு ராமதாஸின் வாழ்க்கைக் கதையை அவர் இயக்குவார் என கூறப்படுகிறது. 

ராமதாஸின் வாழ்க்கைக் கதையை ஆவணப்படமாக எடுக்கும் முயற்சியும் இன்னொருபுறம் நடந்து வருகிறது. வெங்காயம் படத்தை இயக்கிய சங்ககிரி ராஜ்குமார் இதனை எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். விரைவில் இந்த ஆவணப்படம் குறித்து அவர் அறிவிப்பார் என்று தெரிகிறது. சேரன் இயக்கத்தில் உருவாகவுள்ள ராமதால் குறித்த சினிமாவில் ராமதாஸôக சரத்குமார் நடிப்பார் என்ற பேச்சும் நிலவுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com