சீதையின் தங்க மாளிகை

அயோத்தியில் ராமர் கோயிலைப் பார்த்தவுடன் மக்கள் மிகவும் விரும்பி பார்க்க வேண்டிய இடம் சீதையின் தங்க மாளிகையாகும்.  
சீதையின் தங்க மாளிகை


அயோத்தியில் ராமர் கோயிலைப் பார்த்தவுடன் மக்கள் மிகவும் விரும்பி பார்க்க வேண்டிய இடம் சீதையின் தங்க மாளிகையாகும்.  இது "கனக்பவன்'  என்றும் "சோனே காகர்' என்றும் அழைக்கப்படும் தங்க மாளிகையாகும்.
இது ராமர் தனது மனைவி சீதைக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்ட தங்க மாளிகை என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராணி கைகேயியின் வேண்டுகோளின்படி,  அயோத்தியில் தசரத மன்னர் இந்த அழகிய கோயிலைக் கட்டியதாகவும் வழங்கப்படுகிறது.  ஜராசந்தனுக்குப் பிறகு கிருஷ்ணர் அயோத்திக்குச் சென்றபோது,  கனக் பவன் மேட்டில் பிராயச்சித்தம் செய்வதை கண்டதாக விக்ரமாதித்யன் கல்வெட்டு கூறுகிறது . 
கி.பி, 1 761-ஆம் ஆண்டில் சமவத் குப்தாவும் இந்தக் கட்டடத்தைப் புதுப்பித்ததாக அதே கல்வெட்டு கூறுகிறது.  கருவறையில் நிறுவப்பட்டிருக்கும் தெய்வங்கள் மிகவும் அழகாக வசீகரமாக உள்ளன.  இந்தக் கோயில் ராமர், சீதாவுக்கு கைகேயி திருமண பரிசாக அளித்ததாகவும் கூறப்படுகிறது.
மாளிகையின் பிரதான இடத்தில் வெள்ளி கர்ப்பக் கிரகத்தில் தங்க கிரீடம் அணிந்த நிலையில் சீதையும் ராமரும் வீற்றிருந்து வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
ராமர், சீதையின் மூன்று ஜோடி சிலைகள் உள்ளன.  மாளிகையாக இருந்து தற்போது ராமர் சீதையை வழிபடும் கோயிலாக மாறிவிட்ட கனக் பவன் சீதையின் தங்க மாளிகை ஆண்டு முழுவதும் திறந்திருக்கும்.
அயோத்தி ரயில் நிலையத்திலிருந்து 22 கி. மீ. தொலைவிலும் பைசாபாத் சந்திப்பில் இருந்து 91 கி.மீ. தொலைவில் இந்த மாளிகை உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com