இலவசமாக மின்னூல்கள்

இலவசமாக மின்னூல்கள்
Picasa

விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் ‘யஎகமஎ’ என்னும் நிறுவன அரங்கு புதுமையாக அமைந்திருந்ததோடு, பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.

புத்தகக் கண்காட்சி என்றால், புத்தக ஆர்வலர்களைக் கவருவதற்காக அரங்குகளில் புத்தகங்களை விதவிதமாக அடுக்கி வைத்திருப்பார்கள். வாசகர்கள் புத்தகங்களை எடுத்து புரட்டிப் பார்ப்பார்கள். "புத்தகங்களைப் பாருங்க, பிடிச்சா வாங்குங்க, இப்படிப் பக்கங்களைப் புரட்டினா தாள்கள் கசங்கும்...' என்று அரங்குகளில் உள்ளவர்கள் சொல்வார்கள்.

ஆனால், இந்த அரங்கில் புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வரும் ஆர்வலர்கள் புரட்டிப் பார்க்க புத்தகங்கள் எதுவும் வைக்கப்படவில்லை. அரங்கின் மூன்று புறங்களிலும் புத்தகத்தின் பெயர் அதன் "கியூ. ஆர். கோடுகள்' ஒட்டப்பட்டிருந்தன.

வருகை தரும் புத்தக ஆர்வலர்கள் அந்த "கியூ. ஆர். கோடுகளை அலைபேசி மூலமாக ஸ்கேன் செய்து தங்களுக்குப் பிடித்தமான புத்தகத்தை இலவசமாக வாசிக்கும் வசதி இது.

நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் "கியூ. ஆர். கோடுகள்' வாசிப்பவர்களின் வசதிக்காக ஒட்டப்பட்டிருந்தன. புதுமையான இந்த அணுகுமுறை புத்தக ஆர்வலர்களைக் கவர்ந்தது.

இதுகுறித்து யஎகமஎ அமைப்பாளர் கார்க்கி கூறியதாவது:

விழுப்புரத்தில் 12 ஆண்டுகளாக இயங்கிவரும் எங்கள் அமைப்பு சார்பில், மாணவர்களுக்கு இலவசமாக கணினி மென்பொருள் பயிற்சியை அளிக்கிறோம்.

குறிப்பாக, கிராமப்புறத்தைச் சேர்ந்த அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் பயின்று வருகின்றனர். இந்த அமைப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐ ற்றுக்கும் மேற்பட்டோர் பிரபல தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் ஒரு அரங்கம் கிடைத்தது மிகப் பெரிய அதிர்ஷ்டம். இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு மின்னூலை அறிமுகம் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. கண்காட்சியின்போது, 2,500-க்கும் மேற்பட்டவர்கள் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com