ஆசீர்வதிக்கப்பட்ட இடம்

"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் பளிச் கவனம் பெற்றுள்ளார் நடிகர் சத்தியமூர்த்தி.
ஆசீர்வதிக்கப்பட்ட இடம்

"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் பளிச் கவனம் பெற்றுள்ளார் நடிகர் சத்தியமூர்த்தி.  தப்பு தண்டா படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்புக்கு, தற்போது பரவலான வரவேற்பு... ஹாரார் படமாக வெளிவந்துள்ள இப்படம் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுள்ளது.  "" பெரிய ஸ்டார், சின்ன ஸ்டார் என எந்த வித்தியாசத்தையும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கதை இருந்தால் போதும்... இந்த நிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால், எல்லாமே மாறி விடும்.   கதைதான் முக்கியம். இதுதான் கதை என தீர்மானமாக பிடித்து விட்டால், அந்த கதையில் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று விடுவேன். ஓடுகிற படத்தில் இருப்பதை விட, கதை உள்ள படத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன். 

இந்த நிலைப்பாடு கடைசி வரை இருந்தால் அழகான வெற்றிகளின் பட்டியல் தொடரும்.   நெடுந்தூரம் பயணப்பட்டு வந்திருக்கும் இயக்குநர்கள், நல்ல நல்ல கதைகள், நெருக்கமான மனிதர்கள் என எல்லாமும் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. சினிமா ஒரு பதற்றத்துடன் நிற்க வேண்டிய இடம்தான். ஆனால் நம்பிக்கையோடு உழைத்தால், ஆசிர்வதிக்கப்பட்ட இடம் கிடைக்கும். என் சினிமா பயணத்தில் கிடைத்த அனுபவம் இது. எல்லாவற்றுக்கும் நேரம் எடுத்து, புதிது புதிதாக யோசித்து உழைக்கத் தயாராக இருக்கிறேன். அப்படிப் பார்த்தால் இனி வரும் படங்கள்தான் எனக்கான ஸ்டார்ட் பட்டன்.  உன்னதமான நேரம் இது. 

சுவாரஸ்யமான, தீவிரமான படங்களுக்கான காலம்தான் இனி. அப்படி வரும் படங்களில் நான் நிச்சயம் இருப்பேன். கேட்டதை விட, நினைத்ததை விட எல்லாமே அடுத்தடுத்து நல்லதாகவே நடந்துக் கொண்டு வருவதால்,  இது நிச்சயம் சாத்தியப்படும். இந்த ஆண்டில் அது நடக்கும்'' நம்பிக்கையாக பேசி முடிக்கிறார் சத்தியமூர்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com