ஒரே நேரத்தில் 20 கைப்பேசிகள்

சுந்தர் பிச்சையின் பல கைப்பேசி பயன்பாடு: அதிசயம் அல்ல, அவசியம்!
ஒரே நேரத்தில் 20 கைப்பேசிகள்

"கூகுள்', "ஆல்ஃபபெட்' ஆகிய இரண்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அலுவலரான சுந்தர் பிச்சை, பல்வேறு வியாபாரத் தேவைகளுக்காக இருபதுக்கும் மேற்பட்ட கைப்பேசிகளைப் பயன்படுத்துகிறார்.

தரமான ஒரு ஸ்மார்ட்ஃபோன் கைப்பேசியை விலைக்கு வாங்குவது, நிர்வகிப்பது, கையாளுவது என்பது பலருக்கும் சவாலாக இருக்கும். ஆனால், இந்தச் சூழ்நிலையில், சுந்தர் பிச்சை இருபது கைப்பேசிகளை ஒரே சமயத்தில் கையாள்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரும் விஷயமாக மாறியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில்:

""பாதுகாப்புத் தேவை என்பதற்காக, நான் எனது கைப்பேசிகள், கணினியின், கணக்குகளின் கடவுச்சொற்களை அடிக்கடி மாற்றுவதில்லை. அதற்குப் பதிலாக கூடுதல் பாதுகாப்புக்காக. இரண்டு வகைகளில் கணக்குகளைத் திறப்பதை உறுதிசெய்து கொள்கிறேன்.

செயற்கை நுண்ணறிவு உலகை ஆட்டுவிக்கும் சக்தியாக மாறப் போகிறது. தொழில் உலகில் மின்சாரம் புரட்சியை உருவாக்கியதைப் போல், செயற்கை நுண்ணறிவும் உலகைப் புரட்டிப் போடும். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு மாறும்.

கடுமையான கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக குறிப்பிட்ட நேரம் வரை பார்க்கலாம் என்று வரம்புகளை வலியுறுத்துவதன் மூலம் குழந்தைகளை கைப்பேசிகளைக் கையாள அனுமதிக்கலாம்'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com