ஹாய் டீச்சர்!

முதல் செயற்கை அறிவியல் ஆசிரியை அறிமுகம்
ஹாய் டீச்சர்!
Picasa

திருவனந்தபுரத்தில் "மேக்கர்லேப்ஸ் எஜுடெக்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் முதல் செயற்கை அறிவியல் ஆசிரியை "ஐரிஸ்' அறிமுகமாகியுள்ளார். அவர் வீட்டுப்பாடம் கொடுப்பதில்லை என்பதால், மாணவர்களுக்கு வெகுவாகப் பிடித்துவிட்டது.

இந்தியத் திட்டக் குழுவின் "அடல் டிங்கரிங் லேப்' திட்டத்தின்படி, அவதாரம் எடுத்துள்ள "ஐரிஸ்" பாரம்பரிய கற்பித்தல் முறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

நன்றாகப் பேசும். பிறர் பேசுவதைப் புரிந்துகொண்டு அவர்களை கேட்கும் கேள்விகளுக்கு பதிலையும் சொல்லும். வகுப்பறைக்குள் வந்த கொஞ்ச நேரத்தில் மாணவ மாணவிகளின் "நண்பி'யாக ரோபோ ஆசிரியை மாறிவிடுகிறார்.

ஒரே சமயத்தில் மாணவர்கள் பலர் கேள்விகள் கேட்டால் ரோபோ ஆசிரியை திணறிவிடுவார். அதனால் மாணவர்கள் கேள்வியை ஒருவர் ஒருவராகக் கேட்க வேண்டும்.

கேள்விகள் கேட்கப்படும் போது, ரோபோ ஆசிரியை அணிந்திருக்கும் நெக்லஸ் பச்சை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்துக்கு மாறும். இந்த நிற மாற்றம் ரோபோ கேள்வியை புரிந்து கொள்கிறது என்று பொருள். பதில் ரெடியானதும் தலை அசைத்து பதில் சொல்லும். பதில் எடுத்துக்காட்டுகளுடன் இருப்பதுதான் இந்த ரோபோ ஆசிரியையின் சிறப்பு. இப்போதைய ரோபோ ஆசிரியையின் கண்கள் அசையாமல், இருந்த இடத்தில் இருக்கும். அடுத்தபடியாக, ஐரிஸூக்கு இயங்கும் "கண்களை'ப் பொருந்துவதாகும். இது பொருத்தப்பட்டால், பேசும்போது அதற்கேற்ற மாதிரி கண்கள் அசைவதோடு, மேலும் கீழுமாக நகரும். விரியும்... குறுகும். இதனால் ஐரிஸ் ஒவ்வொரு மாணவரின் கேள்விகளுக்கு பதிலளிப்பார். மனிதரைப் போல தானாக இயங்குவார்.

ஹிந்தி, ஆங்கிலம், உள்ளூர் மொழி என்று மூன்று மொழிகள் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தானாக கை குலுக்க கையை நீட்டவும் செய்வார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com