இருசக்கர வாகனங்களை இனி திருட முடியாது!

நம்முடைய இருசக்கர வாகனங்களுக்கு என்னதான் பூட்டு போட்டாலும், அவற்றைத் திருடு போவதில் இருந்து பாதுகாப்பது மிகவும் சிரமமாகவே இருக்கிறது.
இருசக்கர வாகனங்களை இனி திருட முடியாது!

நம்முடைய இருசக்கர வாகனங்களுக்கு என்னதான் பூட்டு போட்டாலும், அவற்றைத் திருடு போவதில் இருந்து பாதுகாப்பது மிகவும் சிரமமாகவே இருக்கிறது.

இருசக்கர வாகனங்கள் திருடு போகாமல் தடுப்பது எப்படி? ஏற்கெனவே உள்ள பூட்டுகளில் என்ன குறை? என்பதையெல்லாம் ஆராய்ந்து, புதிதாக ஒரு பூட்டை "லாக் 8' என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்கள். இந்தப் பூட்டு, திருட்டில் இருந்து இருசக்கர வாகனங்களைப் பாதுகாக்கிறது.

இந்தப் பூட்டு, திருடர்கள் வாகனங்களைத் திருட முயலும்போது சத்தம் எழுப்புவதோடு, வாகன உரிமையாளரின் செல்லிடப் பேசிக்குத் தகவல் அனுப்பிவிடும். அதுமட்டுமல்ல, வாகனம் எங்கே இருக்கிறது என்பதை வாகன உரிமையாளரின் செல்போன் மூலம் தெரிவித்துவிடும். இந்தப் பூட்டின் எடை குறைவு. வண்டியின் பின்புறச் சக்கரத்தில் இதைப் பொருத்திக் கொள்ளலாம்.

இந்தப் பூட்டின் சாவியைத் தொலைத்துவிட்டால் என்ன செய்வது? என்று கவலைப்படவும் தேவையில்லை. ஏனென்றால் இந்தப் பூட்டுக்குச் சாவியே இல்லை. செல்லிடப்பேசியில் பதிவு செய்யப்பட்ட மின்னணு குறியீட்டின் மூலம் இயக்கிக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com