பொதுத் தேர்வுகளும் பெற்றோரும்!

பொதுத்தேர்வுகள் நடைபெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பொதுத்தேர்வுகள் நடைபெறும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

""என் குழந்தைகள் படிப்பதே இல்லை. அவங்க படிக்கறதுக்கு என்ன மார்க் வாங்க போறாங்கன்னு தெரியலையே?'', ""என் பையன் நல்லா படிப்பான். ஆனால், தேர்வுக்கு எப்படித் தயாராகி இருக்கான்னு தெரியலையே?'' என்றெல்லாம் பள்ளியிறுதித் தேர்வுகள் நெருங்கிவரும்போது புலம்பும் பெற்றோர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் தேர்வுக்கு மாணவர்கள் தயாராவது எவ்வளவுக்கெவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் பெற்றோர்களின் பங்களிப்பிலும் உள்ளது.

மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குவதற்கு பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

ரிதங்களது குழந்தைகளுடன் பெற்றோர் நட்பாக இருக்க வேண்டும். தேர்வுக்காகப் படிக்கும் குழந்தைகள் சோர்வடையும் வாய்ப்புகள் உள்ளன. அப்படிச் சோர்வு அடைந்தால் அதிலிருந்து அவர்களை மீட்க பெற்றோர் உதவ வேண்டும். அதற்கு பெற்றோர் - குழந்தை என்ற உறவைத் தாண்டி, ஆழமான நட்புறவு அவசியம்.

ரிமாணவர்கள் தேர்வு நேரத்தில் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி அவர்களிடம் பெற்றோர் வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்போதுதான் பெற்றோர் மாணவர்களுக்கு உதவ முடியும்.

ரிமாணவர்களுக்கு எல்லா நேரங்களிலும் சரியான வழிகாட்டுதல்கள் தேவைப்படும். படிப்பு, தேர்வுகள் குறித்த முக்கியத்துவத்தை பெற்றோர் அவர்களிடம் உணர்த்த வேண்டும். அதேபோல் அவர்களுடைய திறன்களை வெளிப்படுத்துவதற்கும் உதவ வேண்டும்.

ரிநேர மேலாண்மையையும், நேர்முறையான சிந்தனைகளையும் வளர்த்தால் போதும். தேர்வு தயாரிப்பு குறித்த ஆரோக்கியமான போட்டிகளையும் உருவாக்குவது அவசியம்.

ரிதேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் அருகில் உட்கார்ந்து, அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய மாணவப் பருவத்தில் கிடைத்த வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ரி""உன்னால் முடியும், நீ திறமைசாலி'' என்று எப்போதும் ஊக்கப்படுத்தும்விதமாகப் பேச வேண்டும்.

ரிபள்ளியில் நடந்த மாதத் தேர்வுகளில் ஏதாவது ஒரு தேர்வை மாணவர்கள் சரியாக எழுதாமல் சோர்வுடன் வீடு திரும்பினால், ஆக்கப்பூர்வமான அறிவுரைகளைச் சொல்லி, அடுத்த தேர்வுகளுக்குத் தயாராகப் பெற்றோர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும்.

ரிதேர்வு நேரம் என்பதால் பல மாணவர்கள் நன்றாகச் சாப்பிட மாட்டார்கள். உடலுக்குத் தேவையான, பொருத்தமான உணவுகளை அவர்களுக்குப் பெற்றோர் தர வேண்டும். அப்போதுதான் சோர்வின்றி தேர்வுகளை மாணவர்கள் உற்சாகமாக எழுத முடியும்.

இப்படியெல்லாம் முடிந்த அளவுக்கு தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் உதவினால் நினைத்த இலக்கை மாணவர்கள் எட்டுவது நிச்சயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com