வாசியுங்கள் நாளிதழ்களை! நாளை நான் ஐஏஎஸ்!

முதல்நிலைத் தேர்வினை அணுகும்முறை பற்றி நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாளிதழ்களைப் படித்து நடப்பு நிகழ்வுகளை குறிப்புகள் எடுக்கும்போது சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்வுகளைக் கூர்ந்து கவனியுங்கள். சமீப காலங்களில் கணிசமான வினாக்கள் அப்பகுதியில் கேட்கப்படுகின்றன.
வாசியுங்கள் நாளிதழ்களை! நாளை நான் ஐஏஎஸ்!

முதல்நிலைத் தேர்வினை அணுகும்முறை பற்றி நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாளிதழ்களைப் படித்து நடப்பு நிகழ்வுகளை குறிப்புகள் எடுக்கும்போது சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்வுகளைக் கூர்ந்து கவனியுங்கள். சமீப காலங்களில் கணிசமான வினாக்கள் அப்பகுதியில் கேட்கப்படுகின்றன.

இந்தியச் சுற்றுச்சூழல் துறை, தேசிய பல்லுயிர்ப்பெருக்க ஆணையம் (சஆஅ), ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ப்

பெருக்க அமைப்பு (மசஉட) ஆகியவை இணைந்து இந்திய பல்லுயிர்ப் பெருக்க விருதினை வழங்கி வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக அழிந்து வரும் அரிய உயிரினங்களைப் பாதுகாத்து வரும் வனவிலங்கு பூங்காக்கள் அல்லது சரணாலயங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றது என்பதும் உங்களுக்குத் தெரியும்.

2016ஆம் ஆண்டு தேசிய பல்லுயிர்ப் பெருக்க விருது அருணாசலப்பிரதேசத்தின், கிழக்கு காமெங் மாவட்டத்தில் அமைந்துள்ள பக்கே (டஅஓஓஉ) புலிகள் சரணாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அழியும் தறுவாயில் உள்ள 4 அரிய வகை இருவாச்சி பறவை இனங்களை (ஏஞதசஆஐகக) பாதுகாத்து வந்ததற்காக இவ்விருது தரப்பட்டுள்ளது.

இச்சரணாலயம் 01.07.1966 இல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. பின்னர் வனவிலங்குகள் சரணாலயமானது. 23.04.2002 முதல் நாட்டின் 26ஆவது புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

முதல்நிலைத் தேர்வில் சுற்றுச்சூழல் பகுதியில் மட்டும் 13-க்கும் மேற்பட்ட வினாக்கள் தற்போது கேட்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். ஒவ்வொரு வினாவும் வேறுவேறு கோணத்தில் அமைந்திருப்பதுதான் குடிமைப்பணித்தேர்வுகளின் சிறப்பு. 2015 ஆம் ஆண்டு கேட்கப்பட்ட ஒரு கேள்வியைப் பாருங்கள்.

With reference to “dugong” a mammal found in India, which of the following

statements is/are correct?

1. It is a herbivorous marine animal.

2.  It is found along the entire coast of India.

3.  It is given legal protection under schedule 1 of the Wildlife (Protection) Act, 1972.

Select the correct answer using the code given below:

(a). 1 and 2 (b). 2 only

(c). 1 and 3 (d). 3 only

இதில் கூற்று 1 மற்றும் 3 சரியாகும். இதேபோல 2014 ஆம் ஆண்டில் கேட்கப்பட்ட ஒரு வினாவைக் கவனியுங்கள்.

If you walk through countryside, you are likely to see some birds stalking alongside the cattle to seize the insects disturbed by their movement through grasses. Which of the following is/are such bird/birds?

1. Painted stork

2. Common Myna

3. Black-necked Crane

Select the correct answer using the code given below.

(a). 1 and 2(b). 2 only

(c). 2 and 3(d). 3 only

இதற்கு விடை இர்ம்ம்ர்ய் ஙஹ்ய்ஹ ஆகும்.

மேலே கண்டுள்ளவை அப்போதைய நடப்பு நிகழ்வுகளில் அவற்றுக்குள்ள பாதிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அதிகம் பேசப்பட்டவை. அவையே வினாக்களாக கேட்கப்பட்டுள்ளன. எனவே, நாளிதழ்களை வாசிப்பது தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மறவாதீர்கள்.

மேலும் நடப்பு நிகழ்வில் தேர்வுநோக்கில் முக்கியத்துவம் பெற்ற இந்திய அரசியலமைப்பு தொடர்பான ஒரு செய்தியினையும் நாம் அடிக்கடி ஊடகங்களில் காணமுடிந்தது. சமீபத்தில் தமிழ்நாடு, அசாம், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வாழ்ந்து வரும் சில இனத்தவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கப்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள செய்தியினை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆக, இவை தொடர்பான நடப்புச் செய்தியோடு இந்திய அரசியலமைப்பில் தொடர்புடைய பகுதிகளைத் தொகுத்து குறிப்புகளாக்கிக் கொள்ள வேண்டும். உதாரணம் கீழே:

இந்திய அரசியலமைப்பின்படி 1950ஆம் ஆண்டு பழங்குடியினருக்கான பட்டியல் சட்டப்பூர்வமானது. லோகூர் கமிட்டி (LOKUR Committee) சண்டா கமிட்டி (இஏஅசஈஅ இர்ம்ம்ண்ற்ற்ங்ங்) போன்ற குழுக்களின் பரிந்துரை மூலம் பல்வேறு மாற்றங்களை இப்பட்டியல் கண்டது.

இந்திய அரசியலமைப்பின் 50ஆவது பட்டியலும் (நஇஏஉஈமகஉ),

6ஆவது பட்டியலும் பழங்குடியினர் பற்றி பேசுகின்றன. அரசியலமைப்பின் பகுதி லயஐ(16) மற்றும் உறுப்புகள் 330 தொடங்கி 342 வரை பழங்குடியினரோடு தொடர்புடையனவாக உள்ளன.

குறிப்பாக உறுப்புகள் 341 மற்றும் 342 ஆகியவை பட்டியலில் புதிதாகச் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதலோடு நெருக்கமான தொடர்புடையவையாக விளங்குகின்றன. இவ்வுறுப்புகளின்படி இந்திய அரசியலமைப்பு, பட்டியல் பழங்குடியினருக்கு சில சிறப்புரிமைகளை, சலுகைகளை வழங்குகிறது.

ஆதிதிராவிட வகுப்பையோ, பழங்குடி வகுப்பையோ அரசியலமைப்பு குறிப்பிட்டு வரையறுக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஆளுநருடன் கலந்தாலோசித்து இந்த வகுப்பினரை இனங்கண்டு அது பற்றிய அறிவிக்கையைக் குடியரசுத்தலைவரே வெளியிடுவார்.

இவ்வாறு பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பற்றிய பல்வேறு ஆணைகளை குடியரசுத்தலைவர் வெளியிட்டுள்ளார். அவ்வாறு வெளியிடப்படுகின்ற ஆணைகளை நாடாளுமன்றம் மாற்றவோ திருத்தவோ முடியும். இவ்வாறு அரசியலமைப்பு குறிப்பிடுகிறது.

எளிய பின்னணியில் இருந்து வந்து, தளராத நம்பிக்கையையும், கடும் முயற்சியையும் மட்டுமே பின்புலமாகக் கொண்டு குடிமைப்பணித்தேர்வில் வெற்றி பெற்ற ஒரு வெற்றியாளரைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com