நீரைச் சேமிக்க நீர் மேலாண்மைப் படிப்புகள்!

இவ்வுலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக இருப்பது நீராகும்.
நீரைச் சேமிக்க நீர் மேலாண்மைப் படிப்புகள்!

இவ்வுலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக இருப்பது நீராகும்.  மனிதனின் அடிப்படைத் தேவைகளில் நீர் மிக முக்கியமானதாகும்.  நீரை முறையாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நீர்  கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது.  

அதற்கு காரணமாக, இயற்கைக்கு மாறாக காடுகளை அழித்து நகரமாக்கியது, புதிய அறிவியல் தொழில்நுட்பங்களாலும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் சுற்றுச்சூழலில் மாசு ஏற்பட்டு அதனால்  பருவ மழை பொய்த்து போனதைச் சொல்லலாம்.  இத்தகைய சூழ்நிலையில் கிடைக்கின்ற நீரை முறையாக, சிக்கனமாக பயன்படுத்தி நீரைச் சேமிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்.  நீரை முறையாக, சிக்கனமாகப் பயன்படுத்த நீர் மேலாண்மை பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.  

நீர் மேலாண்மை படிப்புகளுக்கு வெளிநாடுகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.   நீர் மேலாண்மை படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. 

இந்தியாவில் நீர் மேலாண்மை பயிற்சி வழங்கும் முக்கிய நிறுவனம்:
ICAR-Indian Institute of Water Management -  http://www.iiwm.res.in/
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com