ஆபத்தான செல்ஃபி...எச்சரிக்கும் ஆப்!

பலரது லைக்குகளைப் பெறுவதற்காக எடுக்கப்படும் அபாயகரமான செல்ஃபி (கைப்படம்), சிலரது உயிரைப் பறிக்கும் கடைசிப் புகைப்படமாக அமைந்துவிடுகிறது
ஆபத்தான செல்ஃபி...எச்சரிக்கும் ஆப்!

பலரது லைக்குகளைப் பெறுவதற்காக எடுக்கப்படும் அபாயகரமான செல்ஃபி (கைப்படம்), சிலரது உயிரைப் பறிக்கும் கடைசிப் புகைப்படமாக அமைந்துவிடுகிறது. அபாயகரமான செல்ஃபி மோகத்தில் உலகம் முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன.
 இதைத் தடுக்கும் வகையில் தில்லி இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய செயலி "ள்ஹச்ற்ண்ங்'- யை உருவாக்கி உள்ளனர். இதில், நமது ஸ்மார்ட் போனில் உள்ள கேமரா எச்சரிக்கையாகச் செயல்படுகிறது. அபாயகரமான இடங்களில் நின்று நாம் செல்ஃபி எடுத்தால், அந்த இடத்தின் அபாயகரமான தன்மையை இந்த செயலி எச்சரிக்கும்.
 உதாரணமாக, ரயில் தண்டவாளம், நீர்நிலைகள், உச்சி மலை, பெரிய விலங்குகள் போன்றவற்றுடன் நாம் செல்ஃபி எடுக்க முயன்றால், "நீங்கள் பாதுகாப்பான இடத்தில் இல்லை' என்று இந்த செயலி எச்சரிக்கும்.
 உலகம் முழுவதும் 5,500-க்கும் மேற்பட்ட அபாயகரமான இடங்கள் இந்த ஆப்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த அபாயகரமான இடங்களை நிர்ணயிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் ஓராண்டுக்கு முன்பே "லோகேஷன் மார்க்கர்' எனும் ஆப்பை வெளியிட்டு, பொது மக்களின் தகவல்களைப் பெற்றுள்ளனர். ஒரே இடத்தை குறிப்பிட்டு அபாயகரமான பகுதி என மூன்றுக்கும் மேற்பட்டோர் பதிவிட்டால் அதை அபாயகரமான பகுதியாக நிர்ணயித்துள்ளனர். இதுபோன்று சுமார் 6000 இடங்கள் அபாயகரமான பகுதிகளாக இவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து இந்த செயலியை உருவாக்கிய தில்லி ஐஐஐடி பேராசிரியர் பொன்னுரங்கம் குமாரகுரு கூறியதாவது:
 ""கடந்த ஓராண்டாக எங்கள் குழு இந்த செயலியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. ஸ்மார்ட் போனில் டேட்டா (இண்டர்நெட்) ஆப் செய்யப்பட்டிருந்தாலும் இந்த செயலி செயல்படும். எவ்வளவு உயரத்தில் நாம் நிற்கிறோம். நமக்கு பின்னால் என்ன பொருள் உள்ளது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை இந்த ஆப் எச்சரிக்கும்' என்றார்.
 - அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com