வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 156

ஹஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 156

ஹஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கே ஒரு மீசைக்காரர், நடாஷா எனும் பெண், வினி எனும் 12 வயது சிறுமி, அவளது பாட்டி இருக்கிறார்கள். மீசைக்காரர் புரொபஸரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்: மீசையை முறுக்குவதை ஆங்கிலத்தில் எப்படி சொல்வது?

புரொபஸர்: Twirl the moustache என்பது தான் மீசையை முறுக்குவது.

வினி: நான் கடந்த மாதம் ஒரு நடனப் பயிற்சிப் பள்ளிக்குப் போயிருந்தேன். அதன் பெயரே சற்று எரிச்சல் ஏற்படுத்தியது. Twirl The Girl Studios. 

கணேஷ்: இதிலென்ன பிரச்னை?

வினி: It is sexist, can't you see that?

புரொபஸர்: Twirl என்றால் சுழல்வது, சுழல விடுவது என்றும் பொருள் உண்டு. ஒரு பெண் ஓர் அழகான கவுன் அணிந்து கொண்டு தன்னை கண்ணாடியில் பார்த்து ரசிக்கிறாள். அப்போது தன் மொத்த உருவத்தையும் காணும் பொருட்டும், பிறருக்கு காட்டும் பொருட்டும் அவள் ஒரு சுற்று லேசாய் சுழன்று வந்து நிற்கிறாள். அது twirling. அதே போல, மேற்கத்திய நடனங்களில் பெண் ஜோடியை ஆண் சுழற்றி விடுவானே... பார்த்ததில்லை?

கணேஷ்: ஆமா சார்

புரொபஸர்: So if you dance with Vini, you might end the dance by twirling her around you. அதனால் தான் twirl the girl என நடனப் பள்ளிக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.
கணேஷ்: அதில என்ன சார் sexist?

புரொபஸர்: Sexist என்றால் பெண்களை அவர்களது பால் அடையாளத்தைக் கொண்டு மட்டும் அடையாளப்படுத்தி, stereotype செய்வது. பெண்கள் எல்லாம் அப்படித் தான் என பேசுவது. இங்கே ஒரு நடனத்தில் பெண்ணை ஆண் தான் சுழற்றி விட வேண்டும், பெண் அவன் சொற்படி ஆட வேண்டும் எனும் தொனியை இப்பெயர் கொண்டுள்ளது. அதனால் அது செக்ஸிஸ்ட் ஆகிறது. ஆங்கிலத்தில் ஏகப்பட்ட செக்ஸிஸ்ட் சொற்கள், சொற்றொடர்கள் உள்ளன. இன்று நாம் அவற்றை தவிர்க்க முயன்று வருகிறோம்.
கணேஷ்: உதாரணமா?
புரொபஸர் (வின்னியிடம்): What is your maiden name?

வினி: What maiden name? what's that? Uhh... you mean my surname?

புரொபஸர்: Yes

வினி: அலெக்ஸாண்டர். வின்னி அலெக்ஸாண்டர்.
கணேஷ்: பாஷா மாணிக் பாஷா போல
புரொபஸர்: ஹா...ஹா... ஆமா. பாஷா ஒரு ள்ன்ழ்ய்ஹம்ங். அதாவது ரெண்டாவது பெயர். நம்மூரில் அப்பா பெயரை அப்படி வைத்துக் கொள்வோம். அப்பா பெயர் ராஜ் என்றால் மகன் பெயர் மோகன் ராஜ் என்றாகிறது. ராஜ் ள்ன்ழ்ய்ஹம்ங். அதே போல, குடும்பப் பெயர்களும் வரும். சச்சின் டெண்டுல்கரில் டெண்டுல்கர் குடும்பப் பெயர். அலுவலக ரீதியாய் யாரையாவது மரியாதையாய் அழைக்க நேரும் போது மிஸ்டர் போட்டு ள்ன்ழ்ய்ஹம்ங்ஐ தான் பயன்படுத்துவோம். அன்பையும் நெருக்கத்தையும் காட்டும் வண்ணம் மட்டுமே ஒருவரை அவரது முதல் பெயரால் அழைப்போம். உதாரணமாய், கோலியை பேட்டி எடுக்கையில் மிஸ்டர் கோலி என்பார்கள். ஆனால் அவரது உற்ற நண்பர்களுக்கு அவர் "விராத்'. 

கணேஷ்: இதில் எங்கே சார் செக்ஸிசம் வந்தது?

புரொபஸர்: Maiden என்றால் கன்னிப் பெண். திருமணத்துக்குப் பின் அவளது இரண்டாவது பெயர் கணவனின் பெயராக மாறி விடும். இப்படி மெயிடன் என்பதிலேயே கன்னி எனும் பொருளில் ஒரு பெண்ணை திருமணமானவளா இல்லையா எனும் வித்தியாசம் பார்த்து மதிப்பிடும் தொனி வந்து விடுகிறது. அதனால் தான் அது செக்ஸிசம். உனக்கு இதை விளக்கத் தான் வினியிடம் அவளது மெயிடன் பெயரைக் கேட்டேன். (வினியிடம்) மன்னிச்சுக்கோம்மா!
வினி: No problem!

புரொபஸர்: மேலும் சில செக்ஸிஸ்ட் பதங்களைச் சொல்கிறேன். கேட்டுக்கோ. முன்பு தேவாலயத்தில் கிறித்துவ முறைப்படி திருமணம் ஆன பின் பாதிரியார் அவர்களை I declare them man and wife என அறிவிப்பார். இதுவும் செக்ஸிஸ்ட் தான்.
கணேஷ்: எப்படி?
(இனியும் பேசுவோம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com