முதல் ஐவர்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (மடநஇ) தேர்வு எழுதிவிட்டு எப்போது அதன் ரிசல்ட் வரும் என்று காத்திருக்கும் காலம் மிகக் கொடுமையானது. இதை  அந்த தேர்வை எழுதியவர்கள் அறிவார்கள்.
முதல் ஐவர்!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (மடநஇ) தேர்வு எழுதிவிட்டு எப்போது அதன் ரிசல்ட் வரும் என்று காத்திருக்கும் காலம் மிகக் கொடுமையானது. இதை  அந்த தேர்வை எழுதியவர்கள் அறிவார்கள்.  அந்தக் கொடுமையான காலத்தின்போது  திடீரென  மகிழ்ச்சிப் புயல் வீசியிருக்கிறது ஐவருக்கு. இந்த தேர்வு எழுதியவர்களில் 759 பேர்  ஐஏஎஸ், ஐபிஎஸ்,  ஐஎஃப்எஸ் போன்ற பல்வேறு பணிகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.  அதில் 577 ஆண்கள். 182 பெண்கள்.

இந்த தேர்வில்  முதல் ஐந்து இடத்தைப் பிடித்திருக்கிற அந்த "முதல் ஐவரை'ப் பற்றி பார்ப்போம்.

கனிஷக் கட்டாரியா:

பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஈஅபஅ நஇஐஉசபஐநப  ஆக வேலை செய்தவர் கனிஷக்.  இவர் இந்தத் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். கணிதத்தை விருப்பப் பாடமாகக் கொண்ட கனிஷக்,  ஐஐடி } மும்பையில் பி.டெக் முடித்தவர்.  தான் முதல் ரேங்க் வாங்குவதாக இதுவரை  கனவு கூடக் கண்டதில்லை  என்று மனம் திறந்து சொல்கிறார் கனிஷக்.

அக்ஷாத் ஜெயின்: 

இந்த தேர்வில் இரண்டாம் இடம் பெற்றிருப்பவர் அக்ஷாத் ஜெயின்.  வயது 23. ஐஐடி } கவுகாத்தியில் டிசைனிங்கில் பட்டம் பெற்றவர்.  நீண்ட நாட்களாகவே சிவில் சர்வீஸ் பணியில் சேர வேண்டும் என்ற ஆசை அக்ஷாத்துக்கு. அவருடைய தந்தை டிசி ஜெயின் சிபிஐ} இல் இணை இயக்குநர். அக்ஷாத் மானுடவியல்துறையில் ஆர்வம் உள்ளவர்.  ""அதைப் படிக்கும்போது மிக ஆர்வமாக இருக்கும். அதே சமயம் மிகவும் சிந்திக்கத் தூண்டும்'' என்கிறார் அக்ஷாத்.

ஜுனைத் அகமது:

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்நார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜுனைத் அகமது. 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்.  இது ஐந்தாவது முறை.  27 வயதான ஜுனைத்  கடந்த ஆண்டு தேர்வு எழுதி 352 இடத்தைப் பிடித்தார். ரெவின்யூ அதிகாரியானார்.  ஆனாலும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவில் இந்த ஆண்டு முயற்சி செய்தார். இப்போது  3 }ஆம்  இடம்.  இவருக்கு முன்பு இந்த தேர்வு எழுதியவர்களிடம் கேட்டு அவர்கள் சொன்னபடி சில புத்தகங்களைப் படித்து இந்த முறை வெற்றி பெற்றிருப்பதாக அவர் சொல்கிறார். 

ஷ்ரேயான்ஸ் குமாத்:

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் அருகே வாழும்  ஷ்ரேயான்ஸ்,  ஐஐடி மும்பையில் மெக்கானிகல் இன்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்றவர்.  இதுதான் யுபிஎஸ்சி தேர்வு எழுதும் இவருடைய  முதல் முயற்சி.  நான்காவது இடம் கிடைத்திருக்கிறது.  இரண்டாம் இடத்தைப் பிடித்த அக்ஷாத் ஜெயினுக்குப் போலவே மானுடவியல்துறைதான் இவருக்கும் பிடித்த பாடமாம்.

ஷ்ருஷ்டி ஜயந்த் தேஷ்முக்:

போபாலில் கெமிகல் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றவர் ஷ்ருஷ்டி. ஐந்தாம் இடத்தைப் பெற்ற பெண். அவருடைய குடும்பத்திலேயே அவர்தான் சிவில் சர்வீஸ் துறையில் வேலை செய்ய வாய்ப்புப் பெற்றிருக்கும் முதல் நபர். ""உங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால், அதற்காக நீங்கள் முறையாக முயற்சி செய்தால் உங்கள் இலக்கை நீங்கள் நிச்சயம் எட்டுவீர்கள்'' என்று சொல்கிறார் ஷ்ருஷ்டி, அதற்கு அவரே ஓர் உதாரணம் என்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com