வாட்ஸ் ஆப் குழு...இணைவது உங்கள் விருப்பம்!

இந்தியாவில் சுமார் 40 கோடி வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் தன்னுடைய குடும்பம், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என தனித் தனி குழுக்களை
வாட்ஸ் ஆப் குழு...இணைவது உங்கள் விருப்பம்!

இந்தியாவில் சுமார் 40 கோடி வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் தன்னுடைய குடும்பம், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என தனித் தனி குழுக்களை வைத்திருந்தால் குழுக்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டிவிடும்.
 பெரும்பாலானோர் "என்னுடைய ஒப்புதலின்றி வாட்ஸ் ஆப் குழுக்களில் சேர்க்க வேண்டாம்' என்ற முகப்பு தகவல்களை வைத்துக் கொள்கின்றனர்.
 தேவையற்ற குழுக்களில் நீங்கள் உறுப்பினராகச் சேர்க்கப்படுவதில் இருந்து தப்பிக்க வாட்ஸ் ஆப் தீர்வு கண்டுள்ளது. இதற்காக உங்கள் வாட்ஸ் ஆப்பை முதலில் அப்டேட் செய்துவிட்டு, " செட்டிங்ஸ் -அக்கவுண்ட் ஆப்சன் - பிரைவசி - குரூப்ஸ்' கிளிக் செய்ய வேண்டும். அதில் "அனைவரும் (எவ்ரிஓன்), என்னுடைய தொலைபேசியில் உள்ளவர்களின் தொடர்பு எண்கள் (மை கான்டாக்ட்ஸ்), யாருக்கும் அல்ல (நோபடி) என இடம்பெற்றிருக்கும்.
 "அனைவரும்' என்பதை தேர்வு செய்தால் யார் வேண்டுமானாலும் உங்களை எந்தக் குழுவிலும் உங்கள் அனுமதியின்றி இணைக்கலாம். "மை காண்டாக்ட்ஸ்' என்பதை தேர்வு செய்தால் உங்கள் தொலைபேசியில் உள்ள தொடர்பு எண்களில் உள்ளவர்கள் மட்டும் அவர்கள் இடம்பெற்றுள்ள குழுக்களில் உங்களை இணைக்கலாம். "நோபடி'யைத் தேர்வு செய்தால், யாராவது உங்களை ஒரு குழுவில் சேர்க்க முற்பட்டால் உங்களுக்கு தகவல் அளிக்கப்படும். அந்தத் தகவலைப் பரிசீலித்து குழுவில் சேர வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.
 புதிய சேவை: இதேபோன்று, வாட்ஸ் ஆப்பிற்குள் நுழைவதற்கு கை ரேகையைப் பயன்படுத்தும் புதிய சேவையை வாட்ஸ் ஆப், தனது பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. செல்லிடப்பேசியைப் பயன்படுத்த எப்படி திறக்கிறோமோ அப்படியே வாட்ஸ் ஆப்பைப் பயன்படுத்த ஒவ்வொரு முறையும் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும். தனி மனிதனின் அந்தரங்க தகவல்கள் திருடுபோவதைத் தடுக்க வாட்ஸ் ஆப் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது. கைரேகை மூலம் திறக்கப்பட்ட வாட்ஸ் ஆப், உடனடியாக அல்லது ஒரு நிமிடம் அல்லது 30 நிமிடம் இடைவெளிக்குப் பிறகு தானாக மூடிக் கொள்ளும். இதைப் பயன்பாட்டாளர்கள் விருப்பத்துக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். இதற்காக "செட்டிங்ஸ் -அக்கவுண்ட் ஆப்சன் - பிரைவசி - ஃபிங்கர்பிரிண்ட்' கிளிக் செய்ய வேண்டும்.
 அ.சர்ஃப்ராஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com