தொடரும் சுட்டுரை!

2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்டர்நெட்டின் குறுந்தகவல் என்று அழைக்கப்படும் டுவிட்டரில் (சுட்டுரை) 30 கோடிக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.
தொடரும் சுட்டுரை!

2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்டர்நெட்டின் குறுந்தகவல் என்று அழைக்கப்படும் டுவிட்டரில் (சுட்டுரை) 30 கோடிக்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்கள் உள்ளனர். ஒரு குறுந்தகவல் உலகம் முழுவதும் பரப்பப்பட்டு, விவாதப் பொருளாக மாறுவதற்கு இந்த டுவிட்டர் பெரும் பங்கு வகிக்கிறது.
நாள்தோறும் பயன்பாட்டாளர்களிடம் இருந்து வெளிப்படும் கருத்தை ஒரு விவாதப் பொருளாக மாற்றும் இந்த டுவிட்டரை விவாத மேடை என்றே அழைக்கலாம். அதுவும் தேர்தல் நேரங்களில் மேலை நாடுகளில் அரசியல் மேடைகளை விட டுவிட்டர் வலைதளத்தில்தான் விவாதங்கள் அனல் பறக்கும்.
அப்படிபட்ட டுவிட்டரில் 6 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருக்கும் கணக்குகளை மூட முடிவு செய்துள்ளதாக சம்பந்தப்பட்ட பயன்பாட்டாளர்
களின் கணக்குகளுக்கு கடந்த சில தினங்களாக தகவல்கள் வரத் தொடங்கின. இறந்தவர்களின் பயன்பாடற்ற கணக்குகளை மூடவும், பயன்பாட்டாளர்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கையை எடுப்பதாக டுவிட்டர் நிறுவனமும் விளக்கமளித்தது.
இதையே விவாதப் பொருளாகப் பயன்பாட்டாளர்கள் மாற்றினார்கள். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிக அளவில் பதிவுகள் பதிவாகின. இறந்தவர்கள் முன்பு செய்த பதிவுகளை தற்போதும் வாசித்து அவர்களின் நினைவுகளைப் புதுப்பித்து வருவதால் அவர்களின் கணக்குகளை அழிக்க வேண்டாம் என உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் தங்களது மனம் திறந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தனர். இதற்கு ஆதரவும் அதிகரித்திருக்கிறது.
இதனால் தனது முடிவில் இருந்து டுவிட்டர் நிறுவனம் பின்வாங்கியிருக்கிறது. இறந்தவர்களின் கணக்குகளில் உள்ள பதிவுகளை பாதுகாத்து வைப்பது தொடர்பான பிரத்யேக பட்டனை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும், இதற்காக தங்களது விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படும் எனவும் டுவிட்டர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. விவாதங்கள் மூலம் சிறந்த மாற்றங்களை உருவாக்கலாம் என்பதை உலகத்துக்கு உணர்த்திய டுவிட்டர் சமூக வலைதளம், இப்போது இறந்தவர்களின் நினைவுகளைப் பாதுகாக்கும் பெட்டகமாகவும் மாறிவிட்டிருக்கிறது.
-அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com