68 லட்சம் புத்தகங்கள்... ஆன் லைனில்!

மாணவர்களின் கல்விக்குத் தேவையான புத்ததகங்கள் "நேஷனல் டிஜிட்டல் லைப்ரரி ஆப் இந்தியா'வின் இணையதளத்தில் உள்ளன.
68 லட்சம் புத்தகங்கள்... ஆன் லைனில்!

மாணவர்களின் கல்விக்குத் தேவையான புத்ததகங்கள் "நேஷனல் டிஜிட்டல் லைப்ரரி ஆப் இந்தியா'வின் இணையதளத்தில் உள்ளன.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை சார்பாக இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, காரக்பூர் நேஷனல் டிஜிட்டல் லைப்ரரி ஆப் இந்தியா இந்த இணையதளத்தை வடிவமைத்து அதில் புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சுமார் 68 இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
புத்தகங்களை நேரடியாக வாங்கிப் படிப்பது மட்டுமல்லாமல், தற்போது வாங்க முடியாத, கிடைக்காத பல புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டியிருக்கிறது. அவை ஆன்லைனில் டிஜிட்டல் புத்தகங்களாக இப்போது கிடைக்கின்றன. அதுபோன்று மாணவர் புத்தகக் கடைகளில் சென்று புத்தகத்தை வாங்கிப் படிப்பதற்கு முன்னதாக அதனை ஆன்லைனில் படித்து அந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். தேவையில்லை என்றால் வாங்காமல் விட்டுவிடலாம். 
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புத்தகங்களைப் படிக்க https://ndl.iitkgp.ac.in/ இணையதளத்தில் தங்களைப்பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்ட பிறகு இணையதளத்தில் புத்தகங்களைப் படிக்க உள்ளீடு செய்வதற்கான பெயர், ரகசிய குறியீட்டை உருவாக்கி அதன் மூலம் இணையதளத்தில் டிஜிட்டல் புத்தகங்களைப் படிக்கலாம். 
எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com