ரோபோ ட்ரோன்!

மனிதர்களின் பணிச்சுமைகளைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் பெரும்பாலும் தரையில் இருந்தவாறே செயல்பட்டு வந்தன. விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டமாக ஆளில்லா சிறிய பறக்கும் கருவிகள்
ரோபோ ட்ரோன்!

மனிதர்களின் பணிச்சுமைகளைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் பெரும்பாலும் தரையில் இருந்தவாறே செயல்பட்டு வந்தன. விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டமாக ஆளில்லா சிறிய பறக்கும் கருவிகள் (ட்ரோன்) உருவாக்கப்பட்டன. ஆனால் இவை பறக்கும் வகையில் மட்டும் வடிவமைக்கப்பட்டு வந்தன. நிலத்தில் ட்ரோன்கள் இறங்கிவிட்டால் அதன்பின்னர் அதன் பயன்பாடு முடிந்துவிடுகிறது.
 இதை முறியடிக்கும் வகையில், ரோபோவில் பாதியும், ட்ரோனில் பாதியும் இணைத்து, பறக்கும் - நடக்கும் ட்ரோனை இஸ்ரேலின் பென்-குரியான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
 ட்ரோனின் எடை குறைவான பாகங்களுடன் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ட்ரோனைப்போல் இருக்கும்; நொடிப் பொழுதில் பறந்து சென்று, பின்னர் கீழே இறங்கும்போது அதன் நான்கு பக்கத்தில் உள்ள ட்ரோன் விசிறியின் கீழுள்ள நான்கு சக்கரங்கள் உருண்டோடி நிற்கின்றன.
 இதன் மூலம் பறக்க முடியாத குறுகிய இடங்களில் இந்த ட்ரோன் தனது சக்கரங்களின் உதவியுடன் உருண்டு, சுருங்கி விரிந்து செல்கிறது. இடத்துக்கேற்ப பறந்தும், உருண்டும், சுருங்கியும், விரிந்து செல்லும் இந்த ரோபோ ட்ரோன், பேரிடர் காலங்களில் மீட்புப் பணிக்கு உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 ட்ரோனைப் பறக்க வைப்பதும், ரோபோவை இயக்க வைப்பதும் ஒரே மோட்டார் என்பதால், இந்த ரோபோ ட்ரோனின் செயல் திறன் மிக அதிகம். ஒரு நொடிக்கு 8 அடி தூர வேகத்தில் இது தரையில் இயங்குகிறது. மேடு பள்ளங்களிலும் தடங்கலின்றிச் செல்கிறது.
 எஃப்ஸடார் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ ட்ரோனை பல்வேறு வடிவங்களிலும், அளவிலும் உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
 - அ.சர்ஃப்ராஸ்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com