இரட்டை மடிப்பு செல்லிட பேசி!

2007 ஆம் ஆண்டில் இருந்து சிறிய அளவு தொடு திரையுடன் அறிமுகமான ஸ்மார்ட் போன் பின்பு பெரிய திரை, கூடுதல் இயக்கத் திறன், வீடியோ கால், திரையின் துல்லியமான காட்சி,
இரட்டை மடிப்பு செல்லிட பேசி!

2007 ஆம் ஆண்டில் இருந்து சிறிய அளவு தொடு திரையுடன் அறிமுகமான ஸ்மார்ட் போன் பின்பு பெரிய திரை, கூடுதல் இயக்கத் திறன், வீடியோ கால், திரையின் துல்லியமான காட்சி, கேமராவின் படப்பிடிப்பில் மேலும் தெளிவு, செல்ஃபி கேமரா என பல்வேறு பரிமாணங்களைக் கண்டு வருகிறது.
 இதன் அடுத்தகட்டமாக ஸ்மாட்போனை மடித்து வைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க பல்வேறு முன்னணி ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பே பணிகளைத் தொடங்கிவிட்டன. ஆனால், இதில் குறிப்பிடத்தக்க வெற்றி இலக்கை சாம்சங் நிறுவனம் அண்மையில்தான் பெற்றிருக்கிறது. அதுவும் முதல் மடிக்கும் செல்லிடப்பேசியை அறிமுகம் செய்த பிறகு அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறில் இருந்து மீண்டு, அந்த நிறுவனம் தற்போது சாதனை படைத்துள்ளது.
 எனினும், இந்த மடிக்கும் வகையிலான செல்லிடப்பேசியின் விலை லட்சக் கணக்கில் உள்ளது. சாம்சங்கைத் தொடர்ந்து ஜியோமி, எல்ஜி போன்ற நிறுவனங்களும் மடிக்கும் செல்லிடப்பேசிகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
 ஒருபுறம் 5 ஜி சேவையைப் பயன்படுத்தும் வகையில் செல்லிடப்பேசிகளில் தொழில்நுட்பத்தை புகுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள், மடிக்கும் வகையிலான செல்லிடப்பேசிகளை உருவாக்கி அதற்கான காப்புரிமைப் பெறுவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன.
 இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த மலிவு விலை டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்களை உற்பத்தி செய்யும் டிசிஎல் நிறுவனம் இரட்டை மடிப்பு செல்லிடப்பேசியை உருவாக்கியுள்ளது.
 ஆங்கிலத்தில் ழ எழுத்தைப்போல் மடிக்கும் வகையிலான இந்த செல்லிடப்பேசி 10 அங்குல நீளம் கொண்டதாகும். பார்ப்பதற்கு புத்தகத்தைப் போன்றிருக்கும் இந்த செல்லிடப்பேசியை இரண்டு இடங்களில் மடித்து சிறிதாக்கி வைத்து கொள்ளலாம்.
 இந்த இரட்டை மடிப்பு செல்லிடப்பேசியின் பெயரையோ, விலையையோ, எப்போது வெளியிடப்படும் என்பதையோ அந்த நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், ஸ்மார்ட் போனை வேறு கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணியில் தயாரிப்பு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருவதையே இது காண்பிக்கிறது. எந்தவித தொழில்நுட்பமாக இருந்தாலும், அது மக்களுக்கு ஏற்ற விலையில் இருந்தால் மட்டுமே சந்தையில் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
 -அ.சர்ஃப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com