கம்யூனிகேஷன் அதிகாரி!

இன்று கம்யூனிகேஷன் அதிகாரி என்பது 360 டிகிரி வேலை என்கிறார்கள். இந்தத் தொழிலின் ஆதிப் பெயர் லையய்சன் ஆபீஸர். இது மக்கள் தொடர்பு அதிகாரி என்று உருமாறி,
கம்யூனிகேஷன் அதிகாரி!

இன்று கம்யூனிகேஷன் அதிகாரி என்பது 360 டிகிரி வேலை என்கிறார்கள். இந்தத் தொழிலின் ஆதிப் பெயர் லையய்சன் ஆபீஸர். இது மக்கள் தொடர்பு அதிகாரி என்று உருமாறி, இப்போது கம்யூனிகேஷன் அதிகாரி என்ற புதுப் பெயரைப் பெற்றிருக்கிறது. இந்தப் பணிக்குரிய பொறுப்புகளும் விரிவடைந்து கொண்டே வந்துவிட்டன. இந்தப் பொறுப்புக்கு ஒரு டிகிரியுடன் மாஸ் கம்யூனிகேஷன் அல்லது ஜர்னலிசம் மேல் படிப்புடன் வருபவருக்கு நல் வாய்ப்பு உண்டு. 
நிதி மற்றும் சந்தை குறித்த புரிதலும் அறிதலும், கூடுதல் பலம். நிர்வாகம் - ஊழியர்கள் தொடர்பு, நிர்வாகம் - அரசு மட்டத் தொடர்பு, நிறுவனப் பத்திரிகை நடத்துதல், நிறுவனம் தயாரிக்கும் பொருளை மக்களிடையே கொண்டு செல்வது, விளம்பரங்கள், மீடியா தொடர்பு, புரோடாகால் என்று பல்வேறு பணிகள் ஒரு நிறுவனத்தின் கம்யூனிகேஷன் துறையில் கவனிக்கப்படுகின்றன. 
மேலும் இப்போது பெரிய நிறுவனங்கள் மக்கள் நல்வாழ்வுப் பணிகளை மேற்கொள்வதை ஒரு சமூகக் கடமையாக வைத்திருக்கின்றன. நிறுவனத்தின் கம்யூனிகேஷன் துறையே இந்த வேலையையும் கவனிக்கிறது. எனவே, இந்தப் பணி செய்ய ஆட்களின் தேவை அதிகமாகிக் கொண்டே போகிறது. தலைமைப் பொறுப்புக்குப் போகும்போது, வருடத்துக்கு ஒரு கோடி சம்பாதிப்பவர்களும் உண்டு. துவக்கநிலை மற்றும் இடைநிலை கம்யூனிகேஷன் அதிகாரிகள் வருடத்துக்குப் பத்தில்இருந்து இருபத்தைந்து லட்சம் சம்பாதிக்கலாம். 
"மாஃபா' கே.பாண்டியராஜனின் 
"ஆயிரத்தில் ஒருவன்' என்ற நூலிலிருந்து...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com