வாங்க இங்கிலீஷ் பேசலாம் 215 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 215 - ஆர்.அபிலாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா எனும் பெண்ணுடன் சேர்ந்து மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். இந்தியர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் வரும் பிழைகளை உண்மையென நம்பி தவறான பிரயோகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் Indianism பற்றி பேச்சு திரும்புகிறது. அவர்கள் பல இந்திய, ஆங்கில தவறுகளைப் பற்றி விவாதிக்கிறார்கள்.
புரொபஸர்: கார்த்திக் அது யார் உன் போன் வால்பேப்பர்ல?
(போனை உற்று நோக்கிக் கொண்டிருக்கும்) கணேஷ்: இது என்னோட..
புரொபஸர்: லவ்வரா? இல்ல ரொம்ப நேரமா உற்றுப் பார்த்துக்கிட்டு இருக்கியேன்னு கேட்டேன்.
கணேஷ்: நோ சார், இது என்னோட cousin sister. பேரு சுதா.
நடாஷா: அழகான சுட்டியான பொண்ணு.
கணேஷ்: ஆமா...
நடாஷா: ஆனா கஸின் சிஸ்டர்னு சொல்றது சரியா புரொபஸர்?
புரொபஸர்: தப்பு தான்.
கணேஷ் இல்ல சார்... நிஜமாவே என் கஸின் சிஸ்டர் தான்.
புரொபஸர்: அதில்லடா. கஸின் என்றாலே போதும். அந்த சிஸ்டர் தேவை இல்ல. ஒண்ணு ஒருத்தங்க உனக்கு சிஸ்டரா இருக்கலாம், இல்ல கஸினா இருக்கலாம். ரெண்டும் சேர்ந்து வரக் கூடாது. ஆனால் ஏன் இந்தியர்கள் கஸின் சிஸ்டர் என சேர்த்து சொல்கிறோம் என்பதை நாம புரிஞ்சுக்கணும்.
நடாஷா: அதென்ன சார்? இது தப்பான புரிதலினால் தோன்றிய சொல் தானே?
புரொபஸர்: அப்படி இல்லம்மா. நம்மூர்ல அப்பா அல்லது அம்மாவோட சேர்ந்து பிறந்தவங்களோட பிள்ளைகளை கஸின் பிரதர் அல்லது சிஸ்டர்னும் சொல்றோம். சித்தப்பா பையன் பொண்ணுன்னா சிலர் அக்கா, தங்கச்சி, அண்ணா, தம்பின்னே நேரடியாக உறவு பாராட்டுவாங்க. ஆனால் மாமா / அத்தை பொண்ணுன்னா அங்கே ஒரு சிக்கல் வந்திடுங்க. சில சமூகங்களில அத்தைப் பொண்ணை கல்யாணம் பண்ணிப்பாங்க இல்ல. அதனால எப்பவுமே இந்த உறவுகள் சகோதர உறவுக்கும் முறைப்பொண்ணு உறவுக்கும் நடுவில மாட்டிக்கிட்டு இருக்குமா அதனால அந்த சிஸ்டர் / பிரதரை கஸினோட சேர்த்துக்குற பழக்கம் நமக்கு ஏற்பட்டிருக்குமுன்னு நினைக்கிறேன். ஆனால் மேற்குலகில இந்த மாதிரி நெருங்கின பந்தங்களுக்கு இடையில பொண்ணு கொடுக்கிற, எடுக்கிற வழக்கம் இல்லையா... அவங்களுக்கு எந்த குழப்பமும் இல்லாமல் கஸின் என்றே சொல்ல முடிகிறது. அதே போல நாம பக்கத்து வீட்டு முதிர்ந்த பெண்களை அக்கா, மாமி, அத்தை, பாட்டி என்றெல்லாம் சுலபத்தில் உறவு பாராட்டுகிறோமே, மளிகைக்கடையில் பொட்டலம் மடித்து தருகிறவரிடம், "அண்ணாச்சி பத்து ரூபா அப்புறமா தரேன்'னு சொல்றோமே இதை மேற்கில் பார்க்க முடியாது. அவர்கள் நெரடியாக பெயரிட்டே அழைப்பார்கள்.
நடாஷா: இந்த கஸினை கல்யாணம் பண்ணிக்கிறது என்ன மாதிரி ஒரு பழக்கம் சார்? பெண்கள் எப்படித் தான் இதையெல்லாம் ஏத்துக்கிட்டாங்களோ? How did they put up with such disgusting practises?
கணேஷ்: ஏன் கூடாது?
நடாஷா: அண்ணனா பழகின ஒருத்தரை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?
கணேஷ்: அதான் சாரே சொன்னாரே, அப்படி எல்லாரும் அண்ணனா தங்கையா பழகுறது இல்ல. By the by நீ பயன்படுத்தினியே put up அதோட பொருளே வேற. நீ தப்பா யூஸ் பண்ணுறே.
நடாஷா: No I am right.
ஜூலி: ரெண்டு பேரும் அடிச்சுக்காதீங்க. I can’t put up with such high decibel noise. டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க?
சேஷாச்சலம்: Put up வேறே put up with வேறே. நீங்க ரெண்டையும் குழப்பிக்கிறீங்கன்னு நினைக்கிறேன். 
கணேஷ்: புரியல டாக்டர்.
சேஷாச்சலம்: Put up என்றால் ஒருவர் தற்காலிகமாக ஓர் இடத்தில் தங்குவது. நீ நாளை மும்பைக்கு போறே. அங்கே ஒரு நண்பரின் வீட்டிலோ அல்லது விடுதியிலோ தங்கும் போது you put up in a friend’s house or in a hotel. அல்லது your friend put you up in his house. புட் அப் வித் என்றால் ஒருத்தரை அல்லது ஒன்றை சகிச்சுக்குறது. I cannot put up with such nonsense. I lose my mind எனச் சொல்லும் போது இந்த பொருள் வருகிறது. கூட வரும் with தான் இரண்டையும் வேறு வேறாக்குகிறது.
(இனியும் பேசுவோம்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com