சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 71

எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனமாகும்.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! - 71

எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனமாகும். இது அமெரிக்காவில் உள்ளது. இங்கு எம்பிஏ கல்வியை வழங்கி வருகிறார்கள். இங்கு அளிக்கப்படும் எம்பிஏ- படிப்பானது, நிதி மற்றும் தொழில்முனைதல், பன்னாட்டு நிறுவனங்களிலும் மிக உயர்ந்த பதவிகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கு மாணவர்களைத் தயார் செய்வதாக உள்ளது. உலகத் தரம் வாய்ந்த முதல் 10 நிறுவனங்களில் பணி செய்ய மாணவர்களைத் தயார் செய்து அனுப்புவது, சிறந்த தொழில்முனவோர்களாக மாணவர்களை உருவாக்குவது ஆகியவற்றை இந்தக் கல்விநிறுவனம் செய்து வருகிறது.

இங்கு 70- க்கும் மேலான மாணவர் கிளப்கள் அமைந்துள்ளன. இதனால் இங்கு பயிலும் மாணவர்கள் தங்களைப் பல்வேறு துறைகளில் ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது. உதாரணமாக இங்கு ஸ்போர்ட்ஸ் கிளப்கள் உள்ளன. அதில் கூடைப்பந்து, கோல்ஃப், ஹாக்கி, ஸ்குவாஷ், ஸ்நோபோர்ட், ரன்னர்ஸ், சாஸர்ஸ், வாலிபால், நீர் விளையாட்டு ஆகிய விளையாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான கிளப்கள் உள்ளன.

இது போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு மாணவர்களை இந்த ஸ்போர்ட்ஸ் கிளப் தயார்படுத்துகிறது. அதேபோன்று இண்டஸ்ட்ரி ஃபோகஸ்டு கிளப்கள் (Industry-Focused Clubs) உள்ளன. அதில், Astropreneurship & Space Industry Club, Coders Club, Data Analytics Club,Design Club, Education Club, Effective Altruism Club, Emerging Technology and Government Club, Entertainment Media and Sports Club, Entrepreneurship Club, Family Business Club, Finance and Policy Club, Healthcare Club, Infrastructure and Project Finance Club, Investment Banking Club, Investment Management Club, Marketing Club, Product Management Club, Real Estate Club, Retail & Consumer Goods Club உட்பட பல கிளப்கள் உள்ளன.

அதேபோன்று பல்வேறு நாடுகளின் தொழில் வணிகம் சார்ந்த அறிவை மாணவர்கள் பெறுவதற்காக Affinity, Regional, & Special Interest Clubs இந்த கல்வி நிறுவனத்தில் உள்ளன. ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகள், ஆசிய நாடுகள், பிரேஸில், ஐரோப்பிய நாடுகள், சீனா, இந்தியா, இஸ்ரேல், ஜப்பான், கொரியா, தைவான் உள்ளிட்ட பல நாடுகளின் வணிகம், தொழில்சார்ந்த கிளப்களும் இங்கு உள்ளன. இவை தவிர, Sloan Jewish Student Organization, Sloan Pride, Sloan Women In Management ஆகியவையும் உள்ளன.

கலை, கலாசாரம் சார்ந்த பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய கிளப்கள் Arts & Culture Clubs என்ற பெயரில் செயல்படுகின்றன.

இங்கு மட்டுமல்ல ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலிலும் கூட இவை போன்ற பல மாணவர்கள் கிளப்கள் உள்ளன.

Aerospace & Aviation Club, Africa Business Club, Asian-American Business Association, Australian & New Zealand Club, Business Ideas for Generational Shifts Club, Business of Sports Club, Canadian Club, Central & Eastern European Club, Education Club, Energy & Environment Club, Entertainment & Media Club, Entrepreneurship Club, Family Business Club, Finance Club, Food, Agriculture & Water Club, General Management & Operations Club, German - Speaking Society, Global Business Club, Government & Public Policy Club, Health Care Club, Hospitality & Travel Club, Investment Club, Leadership & Human Capital Club, Management Consulting Club, Marketing Club,Middle East & North Africa Club, Real Estate Club, Retail & Luxury Goods Club, Sales & Business Development Club, Social Enterprise Club, South Asian Business Association, Transportation, Infrastructure & Logistics Club West Coast Club, Women in Investing Club உள்ளிட்ட பல மாணவர்கள் கிளப்கள் செயல்படுகின்றன.

ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் மற்றும் எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் - ஆகியவற்றில் உள்ள இந்த கிளப்களின் மூலம், இந்த கல்விநிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் வாழ்வின் பல்வேறு துறைகளைப் பற்றி மிக நுட்பமாக, தெளிவாக, அனுபவம் சார்ந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஏற்கெனவே இந்த பல்வேறு துறைகளிலும் உள்ள மேலாண்மை முறைகளைப் பற்றியும் அவற்றின் சாதக, பாதகங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. அதன் தொடர்ச்சியாக, இப்போது நடைமுறையில் உள்ள மேலாண்மை முறைகளை மேலும் மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட முடிகிறது. அவற்றை மேம்படுத்துவதற்கான நடைமுறை சாத்தியங்களைப் பற்றியும் மாணவர்கள் தெரிந்து கொள்ள இந்த கிளப்கள் உதவுகின்றன.

ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலைப் போன்றே இந்த எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்விநிறுவனமும் பல்வேறு துறைகளில் கேஸ் ஸ்டடிகளைச் செய்து வருகிறது. உதாரணமாக, வங்கி மற்றும் நிதித்துறையில் உயர்தரமான தரவரிசைப் பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடிக்கக் கூடிய மேலாண்மைத்துறை வல்லுநர்களை எவ்வாறு உருவாக்குவது என்ற கேஸ் ஸ்டடி செய்து அதை ஆவணப்படுத்தப்படுத்தியுள்ளது. அப்படி ஆவணப்படுத்தப்பட்ட கேஸ் ஸ்டடிகளின் மூலம் கண்டறிந்தவற்றை நடைமுறைக்குக் கொண்டு வரும் பணிகளையும் இந்த கல்வி நிறுவனம் செய்து வருகிறது.

இங்கு படிக்கக் கூடிய மாணவர்களில் 85 சதவீதத்தினர் தங்கள் துறைகளில் தலைமைப் பொறுப்புக்கு வந்துவிடுகின்றனர்.

இது 2018 -ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி, 409 மாணவர்கள் இங்கு படித்தனர். அவர்களில் 61 சதவீதத்தினர் அமெரிக்காவைச் சேரந்தவர்கள். மீதமுள்ள 39 சதவீதத்தினர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இங்கு பயின்ற மொத்த மாணவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள். படித்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தவர்கள் 307 பேர். அது 74.4 சதவீதம் ஆகும். வேலை வேண்டாம்; சொந்தத் தொழில் செய்யலாம் என்று நினைத்தவர்கள் 92 பேர்.

இந்தக் கல்விநிறுவனங்களில் பயின்று தலைசிறந்த நிறுவனங்களில் வேலைக்குச் சென்றவர்களுடைய அதிகபட்ச ஆண்டு வருமானம் 2 லட்சத்து 30 ஆயிரம் டாலர்கள் ஆகும். அவர்களுடைய சராசரி வருமானம் 1 லட்சத்து 50 ஆயிரம் டாலர்களிலிருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் டாலர்கள் வரை இருக்கிறது.

புதிதாக மேலாண்மை பயில வருகிற மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஏற்கெனவே பணியில் உள்ளவர்களுக்கு "எக்ஸிகியூட்டிவ் எஜுகேஷன்' என்ற ஓராண்டுக் கல்வி ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் தரப்படுகிறது.

உதாரணமாக ஒரு நிறுவனத்துக்கு என்ன தேவையோ அதற்கேற்ற செயல்திட்டங்களை அவர்கள் உருவாக்கித் தருகிறார்கள். இந்தியாவில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை உலகத்தரத்துக்கு இணையாக பொதுநிர்வாகத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதுபோன்று எண்ணற்ற நிறுவனங்களுக்கு - அவர்களுக்குத் தேவையான - அவர்களுக்கென்று வடிவமைக்கப்பட்ட நிர்வாகம் தொடர்பான படிப்புகளைச் சொல்லித் தருகிறார்கள்.

உலகநாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள், ஒரு நாட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான கி.மீட்டர்களுக்கு அப்பால் இருந்தாலும், பிற நாடுகளில் மேலாண்மை சார்ந்த துறைகளில் ஏற்படக் கூடிய மாற்றங்களையும் நிகழ்வுகளையும் வணிக மாறுதல்களையும் உன்னிப்பாகக் கவனித்து அதை தங்கள் ஆய்வுகளின் வாயிலாக ஆவணப்படுத்தி உலக அளவில் எடுத்து வைக்கின்றன.

எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் , ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் ஆகிய இரண்டும், அரசு சாராத நிறுவனங்கள் உலக அளவில் என்ன செய்து வருகிறார்கள்? சிறிய நாடுகளின் வாணிபத் தேவைகள் எவை? முறைசாராத பொருளாதார முறைகளினால் ஏற்படக் கூடிய மாறுதல்கள் எவை என்பன போன்றவற்றைக் கண்டறிந்து, ஆய்வு செய்து, அவற்றை ஆவணப்படுத்தி பல்வேறு நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

ஆனால் நமது நாட்டிலுள்ள பெரும்பான்மையான மேலாண்மை நிறுவனங்கள் ஐஐஎம் மற்றும் ஒரு சில பல்கலைக்கழகங்களைத் தவிர, யாரும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதில்லை.

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர்

www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com