சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் ! - 67

ஸ்டான்ஃபோர்ட் லா ஸ்கூல்  அமெரிக்காவில்  மட்டுமின்றி,  உலக அளவில் செயல்படும்விதமாக  "சென்டர்  ஃபார் இனோவேஷன் இன் குளோபல் ஹெல்த்' என்ற  உயர் கல்விக்கான ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளது.
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல் ! - 67

ஸ்டான்ஃபோர்ட் லா ஸ்கூல்  அமெரிக்காவில்  மட்டுமின்றி,  உலக அளவில் செயல்படும்விதமாக  "சென்டர்  ஃபார் இனோவேஷன் இன் குளோபல் ஹெல்த்' என்ற  உயர் கல்விக்கான ஆராய்ச்சி மையத்தை உருவாக்கியுள்ளது.  இதன் மூலம்,  சுற்றுச்சூழலைப்   பாதுகாப்பது,     பின்தங்கிய நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது போன்ற செயல்பாடுகளில்  தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.    நாம் வாழும் பூமியில் ஏற்படும் மாறுதல்கள் ஒவ்வொன்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின்  வாழ்க்கையிலும் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன.  உதாரணமாக, பூமியின் தட்பவெப்பநிலை அதிகரித்தால் பனி உருகுதல் ஏற்பட்டு வெள்ள அபாயம் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.  ஆனால் இந்தப் புவி வெப்பமயமாதல் மனிதகுலத்தின் நடவடிக்கைகளாலேயே  ஏற்படுகிறது.  உலக மக்களுக்குத் தீங்கு விளைவிக்கிறது.   இது மனிதர்களால் ஏற்படக் கூடிய ஆபத்து என்பதால், இவற்றைத் தடுப்பது,  சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துபவர்களின் மீது உரிய நடவடிக்கைகளை  எடுப்பது  ஆகியவற்றுக்கான  சுற்றுச்சூழல் சார்ந்த   சட்டங்களை உருவாக்குவதற்காக,     பல்வேறு துறையினருடன் சேர்ந்து ஆராய்ந்து அவர்களுடைய பரிந்துரைகளையும் ஏற்று, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான  சட்டங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.  அதற்கான சட்டதிட்டங்களை உருவாக்கும் உயரிய பணியில் இங்கு பயிலும் மாணவர்களையும்  ஈடுபடுத்துகிறார்கள்.

ஸ்டான்ஃபோர்ட் லா ஸ்கூலைப் போலவே  மிகப் பழமையான  சட்ட  கல்லூரி ஃபேகல்டி ஆஃப் லா -  யுனிவர்சிடி ஆஃப் ஆக்ஸ்போர்ட்  ஆகும்.  இது ஏறத்தாழ 800 சட்டங்களைப் பயிற்றுவிப்பதையும், புதிய சட்டங்களை உருவாக்குவதும் இங்கு நடைபெற்று வருகிறது. இது உலகிலேயே மதிப்புக்குரிய சட்டக் கல்லூரியாகக் கருதப்படுகிறது. உலகில் சட்டக்கல்வி தொடர்பான   தர வரிசைப் பட்டியலில் இக்கல்லூரி முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. இக்கல்லூரியில் பயின்ற மிக முக்கியமான நபர்களில்  ஒருவராக, கிரேட் பிரிட்டனின் பிரதமரான டோனி பிளேரைச் சொல்லலாம். 

இங்கு உயர்கல்வியில் எம்எஸ்சி லா அண்ட் ஃபினான்ஸ், எம்எஸ்சி கிரிமினாலஜி  அண்ட் கிரிமினல் ஜஸ்டிஸ்,  எம்எஸ்சி டாக்úஸஷன்,  எம்எஸ்சி இன்டர்நேஷனல் ஹியுமன் ரைட்ஸ் லா என பல்வேறு துறைகளில்  சட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. இவர்கள் சட்ட ஆராய்ச்சியில் பல்வேறு துறைகளில் மிகப் புகழ்பெற்ற ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். உதாரணமாக லா அண்ட் டெக்னாலஜி  என்பன போன்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக ஆர்ட் அண்ட் கல்சுரல் ஹெரிடேஜ் லா என்ற உயர்கல்வியில் ஒரு படிப்பு சொல்லித் தரப்படுகிறது. 

இதேபோன்று ஆர்ம்டுகான்ஃபிலிக்ட் அண்ட் ஹியூமானிட்டேரியன் லா போன்றவை இவர்களுடைய ஆராய்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை.  இங்குள்ள ஹ்யூமன் ரைட்ஸ்லா,  Bonavero Institute of Human Rights ஆகியவை  உலகின் மிகச் சிறந்த மனித உரிமைக்கான அடித்தளத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு   வருகிறது. இவர்கள் மனித உரிமை ஆராய்ச்சியாளர்கள், உளவியலாளர்கள், சட்ட வல்லுநர்களுடன் இணைந்து இதன் தரத்தை உலக அளவுக்கு எடுத்துச் செல்கிறார்கள். 

இதேபோன்று சென்டர் ஃபார்  சோசியோ லீகல் ஸ்டடிஸ் என்ற ஆராய்ச்சி மையமானது  சட்டம், சமூகவியல்,  மானுடவியல், அரசியல், சர்வதேச உறவுகள், மனித உறவுகள், பொருளாதாரம், புவியியல், கலை வரலாறு போன்ற பல்வேறு துறைகளைச் சட்டத்துடன்  ஒருங்கிணைத்து,  அவற்றை  மக்களுக்குப் புரியும் வண்ணம்  நடைமுறைப்படுத்துவதில் இக்கல்லூரி சிறந்து விளங்கி வருகிறது. 

D.Phil in Law, DPhil in Criminology, D.Phil in Socio-Legal Studies,  M.Phil in Law, M.Phil in Criminology,  M.Phil in Socio-Legal Research  ஆகிய முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.   

ஆக்ஸ்போர்டில் உள்ள இன்டலக்சுவல் புராபர்டி ரிசர்ச் சென்டர் (ntellectual property research ) என்பது   உருவாக்கப்பட்டது.  சர்வதேச அளவில் அறிவுசார்ந்த சொத்துரிமை  எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஆராய்வதும்,  அதற்கான சட்டங்களை உருவாக்குவதுமே இந்த மையத்தின் நோக்கம்.   சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற உலகின் பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட   ஒரு புதிய உருவாக்கத்திற்கு எவ்வாறு காப்புரிமை பெறுவது?  காப்புரிமைக்கான சட்டத்தை உருவாக்கும்போது,  அது உலகில் உள்ள  பல்வேறு துறைகளின் கண்டுபிடிப்புகளோடு,  அறிவுசார்ந்த படைப்புகளோடு தொடர்புடையதாக இருக்கிறது.  மருத்துவம், பொறியியல்  உட்பட   பல்வேறு அறிவியல் துறை சார்ந்த தொழில்நுட்ப  வளர்ச்சிகளுடன்  தொடர்புடையதாக இந்த அறிவுசார்ந்த சொத்துரிமை உள்ளது. இது போன்ற எல்லாத்துறைகளிலும் உள்ள புத்தாக்க முயற்சிகளுக்கு எவ்வாறு காப்புரிமை தருவது என்பதற்கான காப்புரிமைச் சட்டத்தை இந்த மையம்  உருவாக்கியுள்ளது.

நாம் ஏற்கெனவே கூறியபடி,  இந்தியாவில் உள்ள 0 -14 வயது உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 35 கோடிக்கு மேல் உள்ளது. இதுபோன்ற மனிதவளம் உலகின் எந்த நாட்டிலும் இல்லை.      இவை போன்ற உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் வழங்கி வரக் கூடிய  சட்டப் படிப்புகளையும்,    பல்வேறு துறைகளில் ஏற்படக் கூடிய மாறுதல்களை சட்டத்தின் வாயிலாக எவ்வாறு முறைப்படுத்துவது என்பதையும் நமது இந்திய மாணவர்கள் பயில்வதற்கான   அடித்தளத்தை - கட்டமைப்பை- நாம்  உருவாக்க வேண்டியிருக்கிறது.

ஏற்கெனவே  இத்துறையில் கல்வி பயின்று சாதித்த அனைவருமே அடுத்த தலைமுறையின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு,  அவர்களுக்கு உலகளாவிய வாய்ப்பினை அளிக்காவிட்டால், அதற்கான செயல்களில் முனைப்புக் காட்டாவிட்டால்,  இன்றைய இளம் தலைமுறை வளர்ந்து வரும் உலகில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்துவிடக் கூடிய அபாயம் உள்ளது.  அவர்கள் இதுபோன்ற துறைகளில் முன்னேறிச் செல்லும் வாய்ப்பினை இழந்துவிடுகின்றனர். 

வளர்ந்த நாடுகள் சட்டக் கல்வியை நெறிப்படுத்தி, ஆராய்ச்சிகளை முறைப்படுத்தி, மாணவர்களைப் பல்வேறு துறைகளுக்கான சட்டதிட்டங்களை உருவாக்கும் வல்லமை படைத்தவராக ஆக்கிக் கொண்டிருக்கும் வேளையில், நமது இந்திய மாணவர்கள் அவற்றைப் பற்றி அறியாதவர்களாகவே உள்ளனர். நமது நாட்டில்  சட்டம் என்றாலே    கிரிமினல் சட்டம் மற்றும் சிவில் சட்டமாக மட்டுமே உள்ளது. இந்த இரண்டு பிரிவுகளைத் தாண்டி நாம் செல்லவில்லை. சட்டத்தின் படிக்கட்டுகளில் முதல் இரண்டு படிகளில்தான் நாம் இருக்கின்றோம்.  நாம்  சட்டத்துறையில் எட்டக் கூடிய உயரம் எங்கேயோ உள்ளது. நாம் சட்டத்துறையில் ஏறக்கூடிய படிகள் நமது கண்களுக்குப் புலப்படாத  தொலைவிலேயே  உள்ளன. 

நம்நாடு சுதந்திரம் அடைந்த  பிறகு டாக்டர் அம்பேத்கர் உட்பட  அப்போதிருந்த பல  தலைசிறந்த வழக்கறிஞர்களின் துணையுடன், உலகின்  பிற நாடுகளின் சட்டங்களை  ஆராய்ந்து,   சுதந்திர இந்தியாவுக்குச்  சட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆராய்ந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.  அதன் பிறகு 70 ஆண்டுகளில் சட்டக்கல்வியில் வளர்ச்சிகள் எங்கெல்லாம் உள்ளன? அல்லது வளர்வதற்கான வாய்ப்புகள் எங்கெல்லாம் உள்ளன? என்பதைப் பற்றிய ஆராய்ச்சிகள் இல்லை.  நமது  35 கோடி மாணவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேரையாவது வளர்ந்துவரும் சட்டத்துறையில் ஈடுபடுத்துவதற்கான   அடித்தளத்தை எவ்வாறு நிறுவுவது என்பது பற்றிய  ஆராய்ச்சிகளோ, அதற்கான முன்முயற்சிகளோ  இல்லை.   இது மிக மிக வருந்தத்தக்க விஷயம். 

இன்றைக்கு வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தி உலக அளவில் உருவாகியுள்ள    மிக முக்கியமாக இந்தத் தகவல்களையெல்லாம் - குறிப்பாக சட்டத்துறை சார்ந்த தகவல்களை எல்லாம் நாம்  பரவலாக   கொண்டு செல்ல  வேண்டும். 

ஆனால் சட்டக்கல்வித்துறையின் கொள்கை முடிவெடுப்பவர்கள் எதிர்கால நோக்குடன், வருங்காலத் தலைமுறையினரை சட்டத்துறையில் எவ்வாறு ஈடுபடுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில்லாமல் இருக்கிறார்கள்.  

இதுபோன்றவாய்ப்புகளை உருவாக்கினால் நமது நாடு எவ்வாறு வளம் பெறும் என்பதை இந்திய அரசுக்குத் தெரிவிக்கக் கூடிய போதுமான கொள்கை முடிவெடுப்பவர்கள் இல்லாத காரணத்தால் நமது சட்டம் இன்னும் இருட்டறையாகவே உள்ளது. 

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர்

www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com