மாறுவதைத் தடுக்க ஸ்மார்ட் தொழில்நுட்பம்!

என்னதான் அதிநவீன விமானங்களும், விமான நிலையங்களும் உருவாக்கப்பட்டாலும் விமான நிலையங்களில் பயணிகளின் உடைமைகளைப் புறப்பட்ட இடத்திலேயே விட்டுப்போவதும், மாறிப்போவதும் தொடர்ந்து நடந்து
மாறுவதைத் தடுக்க ஸ்மார்ட் தொழில்நுட்பம்!

என்னதான் அதிநவீன விமானங்களும், விமான நிலையங்களும் உருவாக்கப்பட்டாலும் விமான நிலையங்களில் பயணிகளின் உடைமைகளைப் புறப்பட்ட இடத்திலேயே விட்டுப்போவதும், மாறிப்போவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவசரப் பயணமாக விமானங்களில் பயணிக்கும் பயணிகள் சந்திக்கும் இந்த பிரச்னையை சொல்லி மாளாது.

அதுமட்டுமின்றி,  மாறிப்போன உடைமைகள் எந்த நாட்டில், எந்தக் கண்டத்தில் உள்ளன என்ற தகவலை, சேவை அளிக்கும் விமான நிறுவனங்களாலேயே கண்டுபிடிக்க முடியாத நிலைதான் தற்போதும் நிலவுகிறது.

உலகம் முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 40 உடைமைகள் மாறிச் செல்கின்றன என்கிறது ஆய்வுத் தகவல். அதுவும் 2018 -ஆம் ஆண்டில் சுமார் 2 கோடி பேரின் உடைமைகள் மாற்றப்பட்டுள்ளன என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இதற்கு பஞ்சாப் மாநில லவ்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் குழு புதிய ஸ்மார்ட் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது நடைமுறையில் இருக்கும் பார்கோட் ஸ்கேனர்கள்  மூலமே இந்த புதிய தொழில்நுட்பத்தை அவர்கள் செயல்படுத்தி உள்ளனர். இதற்காக ஒவ்வொரு பையிலும் தனியாக பார்கோட் ஒட்டப்படும். அந்த பை விமான நிலைய கன்வேயர் பெல்டில் வரும்போதே புதிய ஸ்மார்ட் தொழில்நுட்பம் கண்காணித்து எவ்வளவு நேரத்தில் பயணியிடம் வந்து சேரும் என்பதை திரையில் பயணியின் பெயரைக் குறிப்பிட்டே துல்லியமாகக் காண்பிக்கும்.

உடைமைகளை எடுத்துக் கொண்டு பயணிகள் வெளியேறும்போது,  சரியான பையைத்தான் கொண்டு  செல்கின்றனரா என்பதை ஸ்மார்ட் தொழில்நுட்பம் உறுதி செய்து எச்சரிக்கும். இன்னும் சொல்லப்போனால், சரியான  பையை எடுத்துச் சென்றால்தான் வெளியே செல்வதற்கான கதவு திறக்கும். பையை மறந்துவிட்டு சென்றாலோ, வேறு பையைக் கொண்டு சென்றாலோ கதவு திறக்காது. இதன் மூலம் உடைமைகள் திருடப்படுவதையும், தவறவிடுவதையும் தடுக்கலாம் என்றும் இந்த ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை விமான நிலையங்களில் உள்ள தற்போதைய கட்டமைப்பு வசதியிலேயே மேற்கொள்ளலாம் என்றும் ஆராய்ச்சி மாணவர்கள் குழு தெரிவிக்கிறது.

இந்தக் கண்டுப்பிடிப்பை வர்த்தகரீதியில் செயல்படுத்துவதற்கான காப்புரிமை பெறும் நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். சொகுசு வசதிகளை அளிக்கும் விமான நிலையங்களில், பயணிகளுக்கான இந்த அடிப்படை வசதியை அமல்படுத்த வேண்டியது அவசியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com