இணைய வெளியினிலே...

வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும்என்னோட பேரே எனக்கு நொந்த
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....
• கோபுர நிழலில்
ஒளிர்கின்றன...
குப்பை மேடுகள்.
முருக தீட்சண்யா

• கவலைப்படுகிறேன்...
கவலைப்படாமல் 
இருப்பதற்காக!
களந்தை பீர் முகம்மது

• "நம்ம ஆளு எது செய்தாலும் பரவாயில்லை' எனும் மனநிலை நல்லதற்கில்லை. 
யார் செய்தாலும் தப்பு தப்புதான் எனும் அறச்சிந்தனை 
மீட்டெடுக்கப்பட வேண்டும்.
அதுவே எதிர்காலச் சந்ததிக்கு நன்மை பயக்கும்.
யாழினி முனுசாமி

• உயிர்களிடத்து அன்பு வேண்டும்.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான பொது விதி.
கோவி லெனின்

• நம்மை ஒருவர் மதிக்கவில்லை என்று நினைப்பது
முட்டாள்தனம்.
அவங்களுக்கு நம் மதிப்பு தெரியவில்லை என்பதே
உண்மை 
மாரியப்பன்

சுட்டுரையிலிருந்து...
• அடுத்தவர்கள் தம்மை ஏமாற்றுவதை விட 
"தன்னைத் தானே' ஏமாற்றிக் கொள்பவர்களே 
இங்கு அதிகம். 
தாறுமாறு அருள்

• நாலு வரி எழுதிட்டு 
கவிதைன்னு சொல்றானுக...
ரெண்டு வரி எழுதிட்டு 
ஜோக்குன்னு சொல்றானுக...
முன்னது 
ரசிக்குற மாதிரியும் இல்ல.
பின்னது 
சிரிக்குற மாதிரியும் இல்ல.
சாத்தூர்க்காரன்

• நீங்கள் என்னிடம் 
சொல்லும் ரகசியங்கள் 
என்றும் பாதுகாப்பாக இருக்கும்...
எதையும் காதுகொடுத்து கேட்பதில்லை.
கடவுள்

• வறண்டு போகும் பூமியிலும்
வாழத் துடிக்கும் ஒற்றை ஜீவன் நான் 
-பனைமரம்
செல்வமணி

வலைதளத்திலிருந்து...
வாழ்க்கைல எவ்வளவோ நொந்த அனுபவம் இருந்தாலும்
என்னோட பேரே எனக்கு நொந்த அனுபவமா ஆனது தான் கொடுமை.
வெச்சாலும் வெச்ச பேரு "அடலேறு'ன்னு
நம்ம மக்களோட அழிச்சாட்டியம் தாங்க முடியல...
தொலைபேசி உரையாடல் 
நான்: ஹலோ கேஸ் ஏஜன்சியா?
எதிர்முனை: ஆமாங்க, நீங்க யார் பேசறீங்க?
நான்: அடலேறு பேசறங்க...
எதிர்முனை: என்ன அடையாறுல இருந்து பேசறீங்களா?
நான்: இல்லங்க என் பேரு அடலேறு...
எதிர்முனை: என்ன அடலொரு ஆ..
(டென்சனாகி என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் இருக்க)
அலோவ் அடலொரு சொல்லுங்க , எந்த ஏரியா நீங்க?
நான்: நான் கோடம்பாக்கம் ... வீட்ல கேஸ் தீந்துருச்சு அதான்... போன் பண்ண...
எதிர்முனை: முன்னாடி அடையாறுனு சொன்னீங்க..
நான்: இல்லங்க அது எம் பேரு...
எதிர்முனை: அடையாறுனு பேரா ?
நான்: இல்லங்க அடலேறு தான் என் பேரு.
எதிர்முனை: சரி அடலொரு வீட்டு அட்ரெஸ் சொல்லுங்க...
என் பெயரை தப்பாக சொன்னால் கூட பரவாயில்லை... அவர் ஒரு பெயர் படுகொலையை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்.
இதுக்கு மேல என் பெயரை ஒருவர் கொலை செய்வது பொறுக்க முடியாமல் ஏதும் சொல்லாமலேயே ரிசீவரை வைக்க முடிவு செய்து விட்டேன்.
எதிர்முனை: அலோவ் அலோவ் அலோவ்வ்வ்வ்வ்
https://adaleru.wordpress.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com