வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 252

ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 252

ஊரடங்கு உத்தரவு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ்மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். ஒரு சின்ன விசயத்துக்காக வீரபரகேசரி கணேஷிடம் கோபித்துக் கொள்கிறார். அவர் அவனுக்கு மரண தண்டனை விதிப்பதாக, அவன் தலை உடனே கொய்யப்படுமென கட்டளை பிறப்பிக்கிறார். கணேஷ் மன்னிப்புக் கோர, அவர் அவனிடம் பத்து கேள்விகள் கேட்கப் போவதாகச் சொல்கிறார். அதில் ஒன்பதுக்கு சரியாகப் பதிலளித்தால் அவன் தலை தப்பும். இக்கேள்விகளுக்கான பதில்களை கணேஷ் ஜூலியுடன் விவாதித்து சரியான பதில்களைத் தந்து சமாளிக்கிறான்.

அப்போது வீரபரகேசரியின் நாட்டின் எதிரி நாட்டுடன் போர் ஆரம்பிக்கிறது. என்ன முடிவெடுப்பது எனும் கவலையில் வீரபரகேசரி தன் புரவியான ஷாவிடம்ஆலோசனை கேட்க வருகிறார்.

அவர்களிடையே பேசும் போது bangs என ஷா சொல்ல அது குறித்து கணேஷ் விளக்கம் கேட்கிறான். அது புயல் மழையைக் குறிக்கும் சொல் என ஜூலி சொல்ல அது ஒரு ஹேர்ஸ்டைல் என ஒரு தோழி சொன்னதாக கணேஷ் சொல்கிறான். ஏன் இந்த குழப்பம்? பார்ப்போமா?

ஜூலி: ஆமா அமெரிக்க ஆங்கிலத்தில் பேங்க்ஸ்ன்னா பேபி ஷாலினி ஹேர்ஸ்டைல். ஆனால் பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் முதலில் சொன்ன பொருள்.

கணேஷ்: அப்போ பேபி ஷாலினி இங்கிலாந்துக்குப் போனா என்ன சொல்லுவாங்க?

ஜூலி: அங்கே அதுக்கு fringe என்று பெயர்.

கணேஷ்: எவ்வளவு குழப்பம்!

வீரபரகேசரி: அது இருக்கட்டும், வகுப்பில் மணி அடிக்கிறது, வகுப்பு முடிகிறது and the students go bang. இதன் பொருள் என்ன?
கணேஷ்: ம்ம்ம்... இதுவரை சொல்லப்பட்டதை எல்லாம் வைத்துப் பார்த்தால் மணி அடித்த உடனே மாணவர்கள் கத்த ஆரம்பித்து விட்டார்கள் எனப் பொருள் வருகிறது.
வீரபரகேசரி: The bell rang. Bang. The students ran out. இப்போ என்ன அர்த்தம்?
கணேஷ்: ம்ம்ம்... மணியடித்ததும் உடனே குழந்தைங்க ஓடிட்டாங்க.
வீரபரகேசரி: வெரி குட். ரொம்ப முன்னேறிட்டே.
ஜூலி: எப்படிடா இது?
கணேஷ் : சும்மா guess பண்ணி அடிச்சு விட்டேன். வொர்க் ஆகிருச்சு.
ஜூலி: நடத்து நீ!
வீரபரகேசரி: அடுத்த கேள்வி: who has a banging body?

கணேஷ்: ஐயோ, தெரியலியே. மன்னரே, நான் ஜூலி கிட்ட கேட்டுக்கலாமா?
வீரபரகேசரி: ம்ஹும். ஏற்கெனவே ஜூலிகிட்ட கேட்க வேண்டிய வாய்ப்புகளை ங்ஷ்ட்ஹன்ள்ற் பண்ணியாச்சு. வேணும்னா இன்னொருத்தரை தேர்ந்து அவங்க கிட்ட கேட்கலாம்.
கணேஷ்: ம்ம்ம்... புரொபஸர் சார் காப்பாத்துங்க. அதென்ன banging body?
புரொபஸர்: சரி... சொல்றேன்.
வீரபரகேசரி: ஆனால் ஒரு நிபந்தனை.
கணேஷ்: என்ன?
வீரபரகேசரி: பதிலை அவர் நேரடியாகச் சொல்லக் கூடாது. Indirect - ஆ மட்டும் சொல்லலாம்.
புரொபஸர்: சரி கணேஷ், சொல்றேன் தெளிவா கேட்டுக்கோ.
கணேஷ்: சரி சார்.
புரொபஸர்: ஒரு நடிகையோட பெயர் தான் Cadbury சாக்லேட் ஒண்ணோட பேர். அந்த நடிகையை வச்சு யோசிச்சா இந்த வார்த்தையோட பொருள் புரிஞ்சுரும்.
கணேஷ்: ஆஹா சாக்லேட் நடிகையா? யாரா இருக்கும்? இல்ல, சாக்லேட் பேர் கொண்ட நடிகை. அது என்ன சாக்லேட் அப்படி? ஆங் ... கண்டுபிடிச்சிட்டேன். Cadbury சில்க்.
புரொபஸர்: கரெக்ட். சரி அது யாரு?
கணேஷ்: சில்க் ஸ்மிதா.
புரொபஸர்: ம்ம்ம்...
கணேஷ்: சில்க் ஸ்மிதாவுக்கு என்ன இருந்துச்சு? கவர்ச்சியான உடம்பு. ஓ... அப்போ banging bodyன்னா? கண்டுபிடிச்சுட்டேன்.
புரொபஸர்: ஆமா கிட்டே வந்துட்டே...
கணேஷ்: கவர்ச்சியான உடல், கட்டான உடல், வடிவான உடல்.
புரொபஸர்: அப்பாடா, ஒரு குழந்தையை மாதிரி கைபிடிச்சு அழைச்சு வர வேண்டி இருக்கு.
கணேஷ்: மன்னா?
வீரபரகேசரி: சரியான பதில் தான்.
கணேஷ்: ஜூலி, எனக்கு ஒரு சந்தேகம்.
ஜூலி: கேளு.
கணேஷ்: மன்னர் கிட்டே ஷா சொல்லிச்சே a penny for your thought என்று. அப்படீன்னா என்ன?
ஜூலி: சொல்றேன்.

(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com